|
நிறையவை
|
|
|
89. |
+பாங்கா
யொருதிறம் பற்றா தவர்பல் கலைப்பொருளும்
ஆங்கே யுணர்ந்தோ ரடக்க முடையர் அவரவர்கள்
தாங்கா தலித்து மொழிவன கேட்போர் தருமநெறி
நீங்காத நாவ ரிருந்திடு கூட்டம் நிறையவையே. |
(உரை I). நிறையவை யாமாறு உணர்த்........................று.
ஒருவர் பாங்காகி ஒருதிறம் பற்றாதோர், எல்லாப் பொருளும்
தாங்கள் உணர்ந்தோராயினும் அவரவர் உரைக்குமாறு
முற்றக்கேட்போர், அறநெறி நீங்காத அந்தணர் முதலாய் அரசர்
வணிகர் வினைஞர் கூட்டம் நிறையவையாம் எ - று.
எனவே அரசன் மூலமாக இருப்பதாம். (21)
|
|
|