நஞ்செழுத்தும் அவற்றின் இயல்பும்
   
9. +கூறு மளபு மகரக் குறுக்கமும் யரலவின்
ஏறுமா வோவும் யரலவொற் றோடுமேழ் நெட்டெழுத்தும்
வேறுள வாய்தமும் நஞ்செழுத் தாகும்வெற் பாதிபத்தின்
ஈறு முதலு மியலப் பெறாவென்பர் ஏந்திழையே.

     (உரை - I). எ - ன். நஞ்செழுத்தாமாறும் அவற்றின்
இயல்பும் உணர்த்.........று.

     அளபெடையும் மகரக் குறுக்கமும் யா, ரா, லா, யோ, ரோ,
லோ எழுத்தும் (பதினெட்டு) ஒற்றும் நெட்டுயிர் ஏழும் ஆய்தமும்
என இவை நஞ்செழுத்தாம். (இவை) பாட்டுடைத் தலைமகன்
தசாங்கத்தயல் வரப் புணரப் பெறா; எ - று.

“நஞ்செனப் படுமவை ஒப்புட னிற்பின்
துஞ்சுதல் கெடுதலெனச் சொல்லினர் புலவர்.”

இவற்றுள் நெட்டெழுத்தேழும் சொன்னாராயினும் எல்லார்க்கும்
உடன்பாடன்று.     

     (கு - ரை.)
அளபு: உயிரளபெடை, ஒற்றள பெடை. யரலவின்:
இங்கே, யகரம் விட்டிசைத்தது. வெற்பாதி பத்து - மலை முதலிய
பத்து; அவை தசாங்கம்; சூ. 24. இந்நூலாசிரியர் நெடிலை
நஞ்செழுத்தென்று கூறுதற் கேற்பச் சிதம்பரப் பாட்டியலார்
அமுதவெழுத் தல்லாதவெழுத்துக்களை நஞ்செழுத்தென்பர்; (பொருத்.
சூ. 4.) (9)