குறையவை
   
91. +பாடவும் பேசிப் பலகால் நகைசெய்து பாங்குரைத்து
நாடகங் காட்டியோர் நாயக மின்றி நவிலுநன்னூல்
ஏடகம் நோக்கா திகலே பெருக்கி அறத்தைவிட்டுக்
கூடகஞ் செய்துபொய் கூறா விருக்கும் குறையவையே.

     (உரை I). எ - ன், குறையவை யாமாறு உணர்த்..........று.

     (இ - ள்). பொருள்படுத்துவாரை வாதித்துப் பலகால் நகை
செய்து ஒரு திறம் பழித்துப் பாங்காக வுரைத்து அங்கங்களாலே
நாடகமுத்திரை காட்டித் தம்மில் ஓர் நாயகமின்றிப் பலரும்
நாயகமாய், இருவரும் உரைக்கும் நூல் பண்டு தாங்கள் அறிவது
மன்றிப்பகை செய்வதே மிகுந்து தரும நெறி விட்டிருந்தோர்
தம்முள்ளே சங்கேதம் செய்து பொய்யுரைப்பது குறையவையாம்
எ - று.

     (கு - ரை.) பாடவம் - சமர்த்து ; தான் யாவற்றிலும்
வல்லவன் என்று நினைக்கும் தன்மை ; “ஆடவர் திலகனுக் கன்பி
னாரெனப், பாடவம் விளம்பினம்” (கம்ப. சம்பாதி. 7) கூடகம் -
வஞ்சனை. (23)