வாதத் தொலைவு
   
94. +பொருளல கூறல் புனருத்தி தோன்றுதல்                               புன்சொற்களால்
மருள வழங்கல் வழுப்படச் சொல்லுதல்                               மற்றொன்றினைத்
தெருள வுரைத்தல் பயனல சொல்லுதல்                               செய்யிற்றொன்னூல்
தெரிபவ ரெல்லா மவன்றொலைந் தானெனிறு                               செப்புவரே.

     (உரை I) எ - ன், பொருள் பெறற் றொலைவு ஆமாறு
உணர்த்.......று.

     (இ - ள்). பொருளல சொல்லுதல், உரைத்ததே யுரைத்தலும்,
[புனருத்தி தோன்றுதலும்] புல்லிய சொற்களாற் கோபம் பெரு
(கச்செப்பலும்) அழுங்கக் கூறுதலும், .......மெத்தது நிற்க அவற்றிலே
சிலவுரைப்பினும், பயன் படாமற் சொல்லினும், [சொற்றாமாந்து]
தொலைவாமென்ப கற்றுணர்ந்தோரே.

     (கு - ரை.) புனருத்தி - கூறியது கூறல். (26)