|
செய்யுட்
செய்வார்
|
|
|
97. |
+இயலிசை
நாடக மெய்யே யுணர்ந்தோர்கள் எப்பொருளும்
மயலற வாய்ந்தோர் வருணங்கள் நான்கினும் வந்துதித்தோர்
உயர்நெறி நின்றோ ரவையையுற் றோரொரு தெய்வத்தையே
முயல்தரு சித்தத்தர் செய்யுண்முன் பாட மொழிந்தவரே. |
(உரை
I). எ - ன், செய்யுட் செய்வாரை யுணர்த்........று.
(இ - ள்). இயலிசை நாடகம் உணர்ந்தோர்,
எல்லாப்
பொருளும் மயக்கந்தீர உணர்ந்தோர், மறையோர் முதலிய
வருணநான்கின் ஒன்றின் வந்து அவதரித்தோர், உயர்ந்த நெறி
நின்றோர், அவை யாரானும் மதிக்கப்பட்டோர், ஒரு தேவதையை
விடாத சித்தத்தோர் இவர் பாடத் தகுபவர் எ - று, (29)
|