செய்யுட் செய்யலாகாதார்
   
99. மூன்று தமிழின் முறையுண ராதவர் நாற்குலத்திற்
சான்றவ ரல்லவர் தாழ்ந்த வுறுப்பினர் 1தாம்பிணியிற்
றோன்றுந் துயரத்தர் தெய்வந் தொழாதவர்
                            தூய்மையில்லோர்
ஆன்றவர் பாடிடி லானந்த மாமென் றறைவர்களே.

     (உரை I)
. எ - ன், செய்யுட் செய்யலாகாதாரை யுணர்த்.........று.

     (இ - ள்). தமி்்ழ் மூன்றின் தன்மை யுணராதவர், நான்கு
வருணத்தினும் தாழ்ந்தோர்..............வன்பிணியுற்றோர், தெய்வம்
பேணாதவர், நெறிநில்லோர் யாவர் அவர் செய்யுட் செய்யின் அஃது
ஆனந்தமாம் எ - று.

“மங்கலப் பாட்டுப் பரிசியா மொழியின்
பங்கப் படுமெனப் பழித்தனர் புலவர்”

“அரசர்க்குக் கொற்றக் குடைவெண்பாச் சீரிய
மெய்க்கீர்த்தி முறைமை மங்கலச் செய்யுட்
செயப்பெறா தாரென் றிவர்களைப் புணர்ப்பினும்
தன்னை மொழியினும் பின்னை மொழியினும்
இன்ன நெறியோ ரியம்பல் வேண்டும்”

என்பது செய்யுள் வகைமை. பாவின் யாவரையும் முற்படப்பாடு
மவையிற்றுக்கு இப்பெற்றியோர் உரைத்தல் சிறப்பிலவென்க.

     (உரை II). எ - து, இயலிசை நாடகமென்ற மூன்று தமிழும்
வல்லவனாய், பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரனென்ற
நான்கு சாதிக்கு உட்பட்டவனுமாய், உறுப்பு ஊனமில்லாதவனுமாய்,
வியாதியில்லாதவனுமாய், துயரு மில்லாதவனுமாய், நல்லொழுக்க
முடையவனுமாய், தெய்வபக்தியுடையவனுமாய் இருக்கின்றவன் கையிற்
பிரபந்தங் கொள்ளலாம்; இவையல்லாத கீழ்ச்சாதியாய், உறுப்புக்
குறைந்தவனுமாய், நன்றாகக் கல்லாதவனுமாய்,
ஒழுக்கமில்லாதவனுமாய், தெய்வபக்தி யில்லாதவனுமாய் இருக்
கின்றவன் கையிற் கவிதை கொள்ளலாகாது; இஃதறிந்து தனக்கு
மேற்சாதியானாய், கற்றவனுமாய், அழகுடையவனுமாய்த் தெய்வபக்தி
யுடையவன் கையிற் கவிதை கொள்க. இப்படிக் கவிதை கொண்டால்
செல்வமிகுத்துச் சிறப்புத் தனதாகிப் பலபகலும் தான் படியில்
வாழ்ந்திடும்.


     (பி - ம்). 1 ‘வெம்பிணியர்’ (31)