பக்கம் எண் :

64மாறனலங்காரம்

மறையவர்கோன்சென்னியினும்வைத்தெமையாள்செந்தே
னிறைவகுளப்பூங்கண்ணியன்.
(16)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். கண்ணியைப் புனைந்தவனென்னும் வினையைக் குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானென் றுணர்க. என்னை? “காலந்தாமேமூன் றெனமொழிப” “இறப்புநிகழ்வுமெதிர்வுமென்றா, வம்முக்காலமுங் குறிப்பொடுங்கொள்ளு, மெய்ந்நிலையுடையதோன்றலாறே” என்றாராகலின். ஆதலால் வினைக்குறிப்பிற்குங் காலமுண்டெனக் கொள்க. திணை - இதுவுமது. துறை - பழிச்சினர்ப்பரவல்.

முழுக்கலையற்றரைக்கலையுமிழந்தாய்தோகை
      முருந்துறுபீலியின்முழுதுமுன்றில்சீக்கு
மொழுக்குறநின்றனையுடையுமஃதேயானா
       யுன்விரதமெதுபெயரேதுரைத்தியென்னா
வழுக்கறவேயியங்குயிர்கொல்லாமையாசீ
       வகனாகவிறைவன்யாரருகனில்யா
திழுக்கியல்பின்றாந்தனியூர்யாதுசெம்பொ
       னெயிலெனவவ்வெயிலெவணென்றிசைத்துமீட்டும்
(17)

எப்படிவந்தோன்றியதப்படிவத்தெல்லா
      மின்னுயிருண்மையையுணராயியங்கற்பால
வப்படிவத்துயிருளதாயுணர்ந்தாயீசற்
       கருத்துமுறையினிலருத்தியறத்திற்கேற்ற
துப்புரவுண்பதுகடனென்றுள்ளாயாகத்
       தொழிலிகழ்ந்தாய்சுடர்சொருபாம்வேதமார்க்கந்
தப்பினையெம்மறைகொடுசாதிப்பதென்றே
       சமண்மதத்தைப்பழித்தனராயழித்துச்சாய்த்தார்   
(18)

இவையிரண்டும் வினைப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். திணை - பாடாண். துறை - “அமரர்கண்முடியுமறுவகையானு” மென்றதனால் முனிவர்வாழ்த்து ; பார்ப்பனவாழ்த்துமாம்.