பக்கம் எண் :

90மாறனலங்காரம்

விருப்பத்தா லென்னை வஞ்சித்த கள்ளத்தையுடைய விக்கண்களழு வதனைக்கண்டு எம்மையிகழ்ந்து பிரியாதவரையுந் திருமால் திருப்பேர் நகரின்கணுள்ளார் பிரிந்தாரென்று தூற்றுமதனைக்கேட்டுத் தளர்ந்தவென்னுள்ளம் ஒருவழிப்பட்டுநில்லாதென்றவாறு.

இது பாஞ்சாலத்தெளிவு. என்னை? வைதருப்பத்தெளிவுபோல வெளிப்படையுமன்றிக் கௌடத்தெளிவுபோல நுண்ணிதாய்க் குறிப்பினாற் கொள்வதுமன்றி யிடைப்பட்டநீர்மைத்தாய்வந்தமையா னெனக் கொள்க. பகுதி - பொருள்வயிற்பிரிதல். துறை - தலைவி தலைவனை யியற்படமொழிதல். தெளிவுமுற்றும்.

வண்ணமைந்நிறவண்ணன்விண்ணினு
      மண்ணினும்முறைவார்
கண்ணன்விண்ணகர்மஞ்ஞைவிம்மிய
      கண்ணகன்வரையோ
ரண்ணலிம்மலர்கொண்மினென்னவு
      மன்னையங்ஙனம்யா
னெண்ணவொண்ணுதன்முன்னின்முன்னருள்
      கென்னமுன்னினளே.
(88)

என்பது, அன்னாய் ! அழகிய மேகம்போன்ற திருமேனியையுடையான், சுவர்க்கத்தினும் பூமியினு முறைவார் கண்ணினுள்ளான் அவனது திரு விண்ணகரத்து மயில்கள் அகவும் இடமகன்ற மலைப்பக்கத் தொரு பெரியோன் யாங்கள் விளையாடும் வண்டன்மாளிகை முன்றிற்கண் வந்து நுமது வண்டலம்பாவைக்கணிய விம்மாலையை வாங்கிக்கொண்மினென்று கூற, அங்ஙனம் வந்து கூறியதற்குச் செய்யவேண்டுவதென்னென் றியா னெண்ணாநிற்ப, நம தொளிபொருந்தின நுதலினையுடையாள் முன்னாள் அதனை யருள்கென வவன்முன்னேசென்று அதனை வாங்கினள் ; இஃ தியானறிந்தபடி யென்றவாறு.

முன்னில்-இன்முன் ; அஃது முன்றிலென இலக்கணப்போலியாயும் வரும். முன்னிலெனவே வண்டன்மாளிகையும் வண்டலம் பாவையுங் கூட்டியுரைக்கப்பட்டன. இது வைதருப்பச்செறிவு. என்னை? மெல்லினமாகியவெழுத்துச்செறிய மெல்லினவண்ணமுற் றவ்வெழுத்தானாய சொற்கள் செறியச் செறித்தமையி னெனக்கொள்க. பகுதி -