8. கூளி கூறியது 268. | அனந்த சதகோடி தேவராலும் அனந்த சதகோடி யோகராலும் அனந்த சதகோடி நாகராலும் அளந்த றியொணாத நீதிகாணுமே. | (1) | | வேறு | | 269. | மன்னவனு மானத்தா லனைத்துங் கூறி வாக்கிறந்த மெய்ஞ்ஞானம் வகுக்குங் காலை முன்னவனும் வாய்மலரா தாலி னீழல் மோனங்கொண் டிருந்தனனான் மொழிவ தேயோ. | (2) | | சரத மீதால். | 270. | சேய்கிடந்த பொருளதனை யணுகி நோக்கித் தெரிந்ததுபோன் மாலயற்குந் தெரியா நீதி பேய்கிடந்து பிதற்றுமெனக் குறிக்கொ ளாது பெரிதாக விதுதன்னைப் பேணும் பேணும். | (3) | | | | 271. | சீற்றமிகு மஞ்ஞனெனு மிகல்கூர் பாசன் சேர்ந்தமா யாபுரத்தின் றிண்மை தன்னை மாற்றுரையார் மெய்ஞ்ஞான வேந்தை யன்றி மற்றையதன் வலிசிறிது வகுப்பக் கேண்மின். | (4) | | மாயாபுரத்தின் அமைப்பு | | | வேறு | | 272. | மாதாபி தாமதலை மனைவியென வீழ்வோருக் காதாரம் போன்றேறா தாழ்விக்கு மகழினதால். | (5) |
269. மன்ன - நிலைபெற. அனுமானத்தால் - அனுமானப் பிரமாணத்தால். முன்னவன் - தட்சிணாமூர்த்தி. “ஞான மலாதபாத முரையாடி ஞான முரையாடுகாலை யரனார், மோனம லாதுகூற முடியாமல் யாது மொழி யாரி தியாவர் மொழிவார்” அஞ்ஞவதைப். 270. “பேயுரை யாடுகின்ற தெனநீர் கொளாது பெரிதாக வுன்னு மிதுவே” அஞ்ஞவதைப். 271. பி- ம். ‘குறிகளோது’ 272. ”மாதா பிதாமாது லன்றார மகவென், றாயாவ ருஞ்சுற்றம் வீழ் வோர்க ளேறற் காதார மேபோல வமிழ்விக்கு மன்றே” அஞ்ஞவதைப். |