பக்கம் எண் :

32தொல்காப்பியம்-உரைவளம்

இளம்

இச்சூத்திரம் நிறுத்த முறையானே வடசொல் இவை என்றவற்றிற்கு இலக்கணத்தான் அறிய உணர்த்துதல் நுதலிற்று.

உரை : வடசொற்கிளவி என்று சொல்லப்படுவது ஆரியத்திற்கே யுரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை யுறுப்பாக வுடைய வாகுஞ்சொல், எ-று.

அவை உலகம், குங்குமம், 1நற்குணம் என்னுந் தொடக்கத்தன.

குங்குமம் என்றவிடத்து இருசார்க்கும் பொதுவெழுத்தினான் வருதலுடைமையும் ஆரியத்தாலும் தமிழாலும் ஒரு பொருட்கே உரியவாகி வழங்கி வருதலுடைமையும் அறிக.

சேனா

இ-ள் : வடசொற்கிளவியாவது வடசொற்கே உரியவெனப்படும். சிறப்பெழுத்தனீங்கி இருசார்மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம், எ-று.

எனவே, பொதுவெழுத்தானியன்ற வடசொல்லும் செய்யுட் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று.

அவை : வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன.

2‘வடசொல்லாவது வடசொல்லோ டொக்கும் தமிழ்ச் சொல்’ என்றாரால் உரையாசிரியர் எனின், அற்றன்று; ஒக்கும் என்று


1. நற்குணம் என்பதில் உள்ள நல் என்பது ஆரியத்தில் இல்லை.ஆரியத்தில் சத்குணம் என்பதே உண்டு இளம்பூரணர்காலத்தில் நற்குணம் ஆரியத்தும் காணப்பட்டது போலும்.

2. ‘வடசொல்லாவது....... உரையாசிரியர் எனின்” இத்தொடர் இளம் பூரணத்தில் இல்லை. என்றாலும் இத்தொடர்க் கருத்துண்டு அதை “இயற்சொல் திரிசொல்” (சொல்.391) என்னும் சூத்திரத்தில் ‘வடசொல் என்பது ஆரியச் சொற்போலும் சொல்’ என்று அவர் கூறியதால் அறியலாம். உரையாசிரியர் இளம் பூரணரல்லர் என்பதற்கு இத்தொடரும் ஒரு சான்று.