| அதிகாரப் புறனடை சூ. 66 | 429 |
நிகழ்காலம் உணர்த்தும் என்றும், 2பகர வகரம் எதிர் காலம் உணர்த்தும் என்றும், 3ஏனையெழுத்துக்கள் இன் பெற்றும் பெறாதும் உகரம் பெற்றும் பெறாதும் வரும் என்றும், 4வினைக்குறிப்புக்கள் பண்பாம் காலத்தும் வினைக் குறிப்பாம் காலத்தும் வேறு வேறு பொருள் உணர்த்தும் என்றும், 5விரவு வினைகள் பிரிவு வேறு படூஉம் செய்திய ஆம் காலத்து முடிக்குஞ் சொல்லானும் அன்றித் தம்முள்ளே பாலும் இடமும் குறித்துக்கொள்ளும் தன்மையை யுடைய என்றும், வினையெச்சங்கள் காலம் காட்டும் எழுத்துக்கள் பெறும் என்றும், 6அவை திரியும் என்றும், அவை காரண காரியம் பெறும் என்றும், பெயரெச்சங்களுள் காரணப்பொருட்டாய் வருவன கருவிக்கண் அடங்கும் என்றும் பிறவும் வினையியலுட் பிரித்துக் காட்டினாம். இனி, அறுவகைத் தொகையும் தொகுங்கால் இன்ன சொற்கண்ணே இன்ன தொகை தொகும் என்றும், முற்கூறிய வினைச்சொற்கள் தாமும் சில முக்காலமும் சில ஒரோவோர் காலமும் உணர்த்தும் என்றும், அவை பெயர்கள் பெறுங்கால் இன்னவாறே பெயர்கள் பெறும் என்றும், பிறவும் எச்சவியலுள் பிரித்துக்காட்டினாம். இனி, ‘சொல் வரைந்தறியப் பிரித்தனர் காட்டல்’ என்பதனால், ‘திரையன் ஊர்’ என்பது ‘திரையனால் செய்யப்பட்ட ஊர்’ எனவும், ‘திரையனது ஊர்’ எனவும் மூன்றாவதும் ஆறாவதும் விரிந்தது.
2. உண்ப, உண்ணுவ எனக் காண்க. 3. அ, து போலும் எழுத்துகள் எஞ்சிய, எஞ்சின எனவும், போயது, போயினது எனவும் இன்பெற்றும் பெறாதும் வரும். 4. நல்லன் வினைக்குறிப்பு, பண்பாம் காலத்து நன்மையன் என்றும் வினைக்குறிப்பாம் காலத்து நல்லனாயினான் என்றும் பொருள்படும். 5. விரவு வினைகள் : தன்மை முன்னிலை வியங்கோள் வினைகளும் வேறு இல்லை உண்டு என்பனவும். 6. திரிதல் வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குரிய (எச்ச. 61.) என்பதிற் காண்க. |