பக்கம் எண் :

112தொல்காப்பியம்-உரைவளம்

‘பிறவும்’ என்றதனால் வழிவினாதலுந் தன்னொடு அவரிடை உறவு தோன்றற்பாலனவுங் கூறுதலுங் கொள்க.

(உ-ம்)

“அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்
கன்றுகால் யாத்த மன்றப் பலவின்
வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெருங்பழங்
குழவிச் சேதா மாந்தி யயலது
வேய்பயி லிறும்பினா மறல் பருகும்
பெருங் கல்வேலிச் சிறுகுடி யாதெனச்
சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த
செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய்புனங் காவலு நுமதோ
கோடேந் தல்கு னீடோ ளீரே”1      (நற்றிணை-213)

இஃது ஊரும் பிறவும் வினாயது.

“கல்லுற்ற நோய்வருத்தக் காலு நடையற்றேன்
எல்லுற் றியானும் வருந்தினேன்-வில்லுற்ற
பூங்க ணிமைக்கும் புருவமதி முகத்தீர்
ஈங்கிதுவோ நும்முடைய வூர்”2

இஃது ஊர் வினாயது.

“செறிகுர லேனற் சிறுகிளி காப்பீ
ரறிகுவே னும்மை வினாஅ-யறிபறவை


1. கருத்து: நீள் தோள் உடைய மகளிரே! ஊர்ப் பொது மன்றத்தில் உள்ள கன்றுகள் கட்டி வைக்கப்பட்டுள்ள பலா மர வேரில் பழுத்த பழச் சுளைகளைப் பசுக்கள் தின்று அருவி நீரைப் பருகும்படியான நுமது சிறுகுடியாது என யான் வினவச் சொல்லுங்கள். சொல்லவில்லை யென்றால் இத்தினைப் புனங் காவல் நுமதோ என்பதையேனும் சொல்லுங்கள்.

2. கருத்து: கல் தைத்ததால் நோய் உற்ற காலும் நடத் தலையற்றேள். இப்பகற்போதெல்லாம் யானும் சுற்றி வருந்தினேன். பூங்கண்ணும் மதிமுகமும் உடையீர் இங்குக் காணப்படும் இதுவா நம்முடைய ஊர்.