பக்கம் எண் :

களவியல் சூ. 13145

இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும் போல இவையென்பதூஉம், அவ்வந் நிலத்தின் மக்கட்குத் தக்க மன்றலும் வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பதூஉம், இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப்படு மென்பதூஉங் கொள்க.

இனி, அசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர் நீயுஞ் சேறி யென்று ஒருவன் பாங்கு படக் கூறலும், இவனை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடை நின்று கூறலும் உண்மையின், அதுவும் பாங்கனிமித்த முடைத்து இராக்கதத்திற்கும் இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக் கேட்டு, ஒருவன் வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்த முடைத்து. பேய்க்கும் பொருந்துவது அறியாதான் இடை நின்று புணர்ப்பின் அதற்கும் அது நிமித்தமாம். இப்பன்னிரண்டுந் தொன்மையுந்தோலு (550-1) மென்ற வனப்பினுள் வருவன.

வெள்.

பாங்கா நிமித்தம் பன்னிரண்டென்ப. இது களவொழுக்கத்தில் தலைவன் தலைவி இருவரும் கூடுதற்கு நிமித்தமாவன பன்னிரண்டு என்பர் ஆசிரியர், எ-று.

அவையாவன காட்சி ஐயம் துணிவு என இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடீறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் ஆகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டத்திற்குக் காரணமாவனவாதலாற் பாங்காம் நிமித்தம் எனப்பட்டன. பாங்காம் நிமித்தம் என்பது பாங்கு ஆம் நிமித்தம் எனப் பிரியும். பாங்கு-துணை. நிமித்தம்-காரணம் ‘பாங்கா நிமித்தம்’ என்பதே ஏடெழுதுவோரால் ‘பாங்கர் நிமித்தம்’ எனப் படிக்கப் பெற் றிருத்தல் வேண்டும். ‘பாங்கர் நிமித்தம்’ என்பது இளம்பூரணர் கொண்ட பாடம்.

சிவ.

பாங்கற் கூட்டத்தின் தொகையும் வகையும் கூறத் தொடங்கி இச் சூத்திரத்தால் விரி கூறப்படுகின்றது.

தொ-10