பக்கம் எண் :

20தொல்காப்பியம்-உரைவளம்

படும். இக்களவு மணம் யாழோர் கூட்டம் போலமைதலின் அதனொடு ஒப்பித்தார் ஆசிரியர். அதனால் களவு மணம் யாழோர் மணத்தில் அடங்கத் தமிழ் நூலார் கண்ட மணம் எட்டாயிற்று.

மறை என்பது நூல். ‘நரம்பின் மறைய’ எனப் பிறிதோரிடத்தும் ஆசிரியர் ஆண்டார்.

மறையோர் தேஎத்து மன்றல் என்பதற்கு ஆரிய மணம் எனக் கொண்டு இளம்பூரணர் முதலியோர் கூறுவது பொருந்தாது.

ஆரிய மணம் எட்டாவன: பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் ஆசுரம் இராக்கதம் பைசாசம் காந்தருவம் என்பன.

மேலே கூறப்பட்ட எண் வகை ஆரிய மணங்களுள் பிரமம் முதல் ஆசுரம் வரையுள்ள ஐந்து மணங்களும் தலைவியின் பெற்றோரால் மணந்து கொடுக்கப்படுவன. அதனால் மணமக்கள் மணந்த பின்னர் மன விருப்பத்தோடு இன்புற்று இல்லறம் நிகழ்த்துவர்.

தலைமகளின் தமரால் தரப்படாமலும் தலைமகள் விருப்பின்றியிருக்கவும் வலிதிற்பற்றிக் கூடும் இராக்கதத்தில் மன விருப்பில்லையாதலின் அக்கூட்டம் கற்பழிப்பின் பாற்படுமேயன்றி மணம் ஆகாது. கூடிய பின்னர் இனிய இல்லறமும் நிகழாது.

மூத்தோர் களித்தோர் துயின்றோருடன் கூடுவதாகிய பைசாசம் பின்னர் இல்லறத்துக்கு உரியதன்று ஆதலின் மணம் எனப் படாது. ஆடை மாற்றிக் கூடுவது அதாவது ஏமாற்றிக் கூடுவதும் மணம் ஆகாது.

மணம் என்னும் சொல் கலத்தல் என்னும் பொருளது, உடம்பாற் கலத்தலை மட்டும் தமிழர் மணம் என்னும் சொல்லாற் குறித்தல் இல்லை. உள்ளத்தாற் கலத்தலையும் மணம் என்னும் சொல்லாற் குறிப்பர். இராக்கதமும் பைசாசமும் கூட்டத்துக்கு முன்னும் பின்னும் அப்போதும் உள்ளத்தாற் கலத்தல் இல்லையாதலின் மணம் என்பதற்கே இடமில்லை. ஆரியர் இவற்றையும் மணம் எனக் கொண்டாலும் தமிழர் கொள்ளார். நன்று தீது நோக்காது, வாழ்வையும் கருதாது, மணம் என்னும் சொல்லுக்கு உடற் கலப்பு ஒன்றையே கருதிப் பொருள் கொண்டனர் ஆரியர். எனவே ஆரியர் கூறும் எண் வகை மணம், தமிழர் கூறும் எண் வகை மணத்தினும் வேறு