அவன் அளி சிறப்பினும்-தலைவிக்குக் காமமிக்க கழிபடர் சிறந்தாற் போல்வது தலைவன்கட் சிறந்துழி, அது காரணத்தால் அவன் அளி சிறந்து தோன்றினும்; இவ்வாறு அரிதின் வருகின்றான் வரைகின்றலனென அவ்விரண்டுந் தோன்றும்: (உ-ம்) “இருள்கிழிப் பதுபோன் மின்னி வானந் துளிதலைக் கொண்ட நளிபெய னடுநாண் மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை யிரும்பு செய் கொல்லரிற் றோன்று மாங்கண் ஆறே யருமர பினவே யாறே சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய கழைமாய் நீத்தங் கல்பொரு திரங்கல் அஞ்சுவந் தமிய மென்னாது மஞ்சுசுமந் தாடுகழை நரலு மணங்குடைக் கவாஅ னீருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய விருங்களிறட்ட பெருஞ்சினை வுழுவை நாம நல்லராக் கதிர்பட வுமிழ்ந்த மேய்மணி விளக்கிற் புலர வீர்க்கும் வாணடந் தன்ன வழக்கருங் கவலை யுள்ளு நருட்கும் கல்லடர்ச் சிறுநெறி யருள்புரி நெஞ்சமொ டெஃகுதுணை யாக வந்தோன் கொடியனு மல்லன் றந்த நீதவ றுடையையு மல்லை நின்வயி னானா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே”. (அகம்-72) ‘வந்தோ’ னென்பது அவனளி சிறத்தல், ‘தவறுடையே’ னென்பது தன்வயினுரிமை, ‘கொடியனுமல்ல’ னென்பது அவன்வயிற் பரத்தைமை.
பார்த்து அவனிடம் நீ இப்படி இரவில அரிய வழியில் வருதல் தகாது என்று நிறுத்தி விடுக’ என்பதாம். 1. கருத்து: தோழீ! நம் தலைவன் நம்மைச் சந்திக்கவரும் வழியானது,நெருப்புப் பொறி பரக்கக் கொல்லன் |