தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனால், அல்லல் களைந்தனன் றோழி நந்நக ரருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னோடு சூழ்வ றோழி நயம்புரிந் தின்னது செய்தாளி வளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே” 1 (கலி-54) எனக் கைப்பட்டுக் கலங்கிப் புணர்ச்சி நிகழ்ந்தமை கூறி ‘அருங்கடி நீவாமைக் கூறின் நன்’ றெனத் தமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலைவி கூறினாள். சுரிதகத்து இருகாற்றோழி யென்றாள் நாணுத் தளையாக மறைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனாக. “எரியகைந் தன்ன செந்தலை யன்றில் பிரியின் வாழா தென்மோ தெய்ய துறைமேய் வலம்புரி துணைசெத் தோடிக்
1. கருத்து: தோழீ! கூந்தலையும் முன் கையையும் தோளையும் உடையவளே என என்னை விளித்து, நின் அடிக்கண் யானை உறைதலுக்கு நீ அருளாதிருப்பது தக்கதோ, எனச் சொல்லி மகரவாய்ச் சுட்டியணிந்த கூந்தலில் ஒரு மாலையைத் தன் விரலாற் சுற்றி மோந்து பார்த்தலும் செய்தான். என் விரலைப் பற்றித் தன் கண்ணில் வைத்துக் கொல்லன் உலை மூக்குப்போல் (துருத்திபோல)ப் பெருமூச் செறிந்தான். தொய்யில் எழுதிய இளமுலைகளைத் தடவிக் கொடுத்து அத்தொய்யிற் குழம்புபட்ட கையாலேயே மையலால் பிடியைத் தழுவும் களிறுபோல என் உடல் முழுதும் தடவி மயக்கினான். அதனால், அவன் கையிலகப்பட்ட வருத்தத்தைப் போக்கினேன். நான் நின்னொடு கேட்பது இதுவே. தாயிடம் சென்று நின்மகள் ஒருவனை விரும்பிக் கற்புக் கடம் பூண்டாள் என்று சொல்லி (அறத்தொடு நின்று) நம் மனையிலேயே அவனொடு மணம் நீங்காமல் செய்வாயானால் நிலையாவுலகத்து புகழ் நிலைக்கும், அறிக. |