பக்கம் எண் :

களவியல் சூ. 24403

கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி
யங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன்
றிரையணற் கொடுங்கவு ணிறைய முக்கி
வான்பெய னனைந்த புறத்த நோன்பியர்
தையூ ணிருக்கையிற் றோன்று நாடன்
வந்தனன் வாழி தோழி யுலகங்
கயங்க ணற்ற பைதறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே” 1      (நற்றிணை-22)

இதனுள் தினை விளைகாலம் வதுவைக் காலமாயினும் வம்பமாரி இடையிடுதலான் அன்று யான் கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்யாகவே வந்தனரென்றாள்.

“உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுத
லரவுவாள் வாய முள்ளிலைத் தாழை
பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும்
பல்பூங் கானற் பகற்குறி வந்துநம்
மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினுங்
குன்றிற் றோன்றுங் குவவுமண லேறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
தண்டா ரகலம் வண்டிமிர் பூதப்
படுமணிக் கலிமாக் கடைஇ
நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே” 2      (நற்றிணை-235)


1. கருத்து: முதலில் முற்றிய தினைக்கதிர்களைப் பறித்துக் கொண்ட மந்தியானது தன் ஆண் கடுவனுடன் மலை மீது ஏறி கதிரை ஞெமிடிக் கொண்டு தினைகளைக் கவுளில் அடக்கி மழையில் நனைந்த முதுகுடன் காணும் காட்சியானது நோன்பு மகளிர் தைம்மாதத்து நோன்பிருந்து உண்ண இருக்கும் இருப்புப்போல் தோன்றும் படியான நாடன் இதோ நின்னை வரைந்தெய்த வந்தான். மழையற்ற வறண்ட காலத்தில் இரவில் சூல் கொண்ட நெற்பயிருக்கு மழை பொழிந்தது போல நாம் மகிழ வந்தான்.

2. கருத்து: தோழீ! தாழையானது புன்னையொடு கமழும் பூங்கானலில் பகற்குறியிடம் வந்து நம்மை