வொழுக்கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்டதென்று உரைப்பாரும் உளர். இவ்விதி அந்தணர்க்குக் கூறியதன்று. அரசர் வணிகர் ஆகியவர்க்குச் சிறுபான்மையாகவும் ஏனைய வேளாளர் ஆயர் வேட்டுவர் முதலியோர்க்குப் பெரும்பான்மையாகவுங் கூறிய விதியென்றுணர்க. என்னை பூப்பு நிகழுங்காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்தினார்க்கு, “அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் (146) என்பதனாற் பிராயச்சித்தம் விதிப்பராதலின், இதனானே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்கால் அறத்தொடு நின்றும் வரைதல் பெறுதும். வெள். இது தோழியின் துணை பெற்றாலன்றிக் களவொழுக்கம் தொடர்ந்து நிகழ்தல் இயலாது என்கின்றது. (இ-ள்) : களவிற் புணர்ச்சி மூன்று நாட்கள் என்னும் கால எல்லைக்கு உட்பட்டல்லது தோழியின் துணையின்றித் தொடர்ந்து நிகழாது. மூன்று நாட்களாகிய கால எல்லைக்குள்ளும் தோழியின் துணை கிடைக்குமாயின் வரைவின்றி ஏற்றுக் கொள்ளப்படும், எ-று. இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்று நாள் எல்லையளவும் தலைவன் தோழியின் துணையின்றித் தலைமகளைக் கண்டு அளவளாவுதல் கூடும் என்பதும், மூன்று நாட்களுக்கு மேலாயின் தோழியின் இசைவின்றித் தலைமகன் தலைமகளை எதிர்ப்படுதல் அரிது என்பதும், மூன்று நாட்களாகிய அவ் வெல்லைக்குள்ளேயே தோழியின் துணையினைப் பெறுதலும் உண்டு என்பதும் இந் நூற்பாவாற் புலனாம். இங்குத் துணை என்றது தோழியை. இது, ‘துணைச் சுட்டுக் கிளவி’ என அடுத்துவரும் நூற்பாவால் இனிது புலனாம். சிவ. இச் சூத்திரத்துக்கு மூன்று வகையில் உரை கூறப்பட்டுள்ளது. |