பக்கம் எண் :

களவியல் சூ. 959

நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்ற
ஐயிரண் டவத்தையும் பெய்கழல் காளையும்
புகுமுகம் புரிதல் முதல லாகிக்
காட்சி முதல் மூன்றையும் கருதிநன் நான்காய்
ஆட்சியின் அமைந்தா றாறுமெய்ப் பாடும்
முருந்திள முறுவலும் பொருந்துதல் உறினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற் குரித்தே.

முத்து. கள. 5.

தொல்காப்பியச் சூத்திரமே.

இளம்.

என்-எனின், மெய்யுறு புணர்ச்சி நிகழுங் காலம் உணர்த்துதல் நுதலிற்று.

மேல், “பெருமையும் உரனும் ஆடூஉமேன” எனவும்.

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”      (தொல். கள-8)

எனவும் ஓதியவதனான் உள்ளஞ் சென்ற வழியும் மெய்யுறு புணர்ச்சி வரைந் தெய்தி நிகழ்ப என்றாராம். அவ்வழிச் சாக்காடெல்லையாகிய மெய்ப்பாடு வரின் மெய்யுற்றுப் புணரப் பெறு1மென்பது உணர்த்திற்று.

(இ-ள்) : வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக ஓதப்பட்ட காமச் சிறப்புடையனவாற்றாற் களவு ஆமென்று சொல்லுவர் என்றவாறு.

ஆனும் ஆமும் எஞ்சி நின்றன.2 இவற்றை அவத்தையென்ப. அஃதேல் அவை பத்துளவன்றே, ஈண்டுரைத்தன ஒன்பதா லெனின் காட்சி விகற்பமுங் கூறினார். அஃது உட்படப்பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது. வேட்கை இரண்டாவது என்று கொள்க.


1. ‘புணரப் பெறுப என்பது’ என்றிருப்பின் நன்று.

2. மரபினவையான் எனவும் களவுஆம் எனவும் இருத்தற் பாலன ஆன் ஆம் எஞ்சி மரபினவை, களவு என நின்றன. மரபு-சிறப்பு. மரபினவையான் - சிறப்புடையனவற்றால்.