பக்கம் எண் :

74தொல்காப்பியம்-உரைவளம்

அல்கலும் பொருந்துவ மாகலின்
ஒல்கா வாழ்க்கைத் தாகுமென்னுயிரே” 1

இதுவும் அணித்து எம்மிடமென ஆற்றுவித்தது. ‘பயின்று2‘ எனவே, பயிலாது வரும் ஆயத்துய்த்தலும், யான் போவலெனக் கூறுதலும், மறைந்து அவட் காண்டலும், கண்டு நின்று அவணிலை கூறுவனவும், அவளருமை யறிந்து கூறுவனவும் போல்வன பிறவுங் கொள்க.

“யான்றற் காண்டொறும்”

என்னுஞ் செய்யுளுள்

“நீயறிந்திலை யானெஞ்சே
யானறிந்தேனது வாயாகுதலே”

என மறைந்து அவட் கண்டு நின்று தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குக் கூறியது,

“காணா மரபிற்றுயிரென மொழிவோர்
நாணிலர் மன்ற பொய்ம் மொழிந்தனரே
யாஅங் காண்டு மெம்மரும் பெறலுயிரே
சொல்லு மாடு மென்மெல வியலுங்
கணைக் கானுணுகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே”3


1. கருத்து: அழகிய மெல்லிய கூந்தலுடையவளே! துன்புற்று வருந்தாதே. எம்முடைய மலைவாழ் குறவர் தினைப் புனம் அமைக்கக் கோடரி கொண்டு வெட்டி வீழ்த்த சந்தனமரம் நின் அல்குலுக்குத் தழையுதவும்படியான அணிமைத் தன்மையுடையது என்பர்; அதனால் நான் பலகால் வந்து நம் பிரிவுத் துயர் தீரத் தங்குதலும் மேற் கொள்வன் ஆதலின் என் உயிர் என் ஊரிலேயே தங்குதல் இல்லாத வாழ்க்கையுடையதாகும்.

2. கருத்து: சூத்திரத்தில் நிகழும் என்பதற்குப் பயின்றுவரும் என்று உரை கூறினார். அதனால் ‘நிகழும் எனவே’ என்பதற்குப் பதில் ‘பயின்று’ எனவே என்றார்.

3. கருத்து: உயிரானது காணமாட்டாத தன்மையுடையது என்றுரைப்பார் பொய் கூறினாராவார். அதனால் அவர் நாணவுமாட்டார் யான் என் உயிரைக் கண்டேன். அது கணைக் காலையும், நுணுகிய இடையும் கருங் கண்ணையும் தோளையும் உடையது. அது சொல்லவும் சொல்லும். மென்மெல நடக்கும்.