தல். வறுமையென்பது, போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்குந் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றினும் அவலமாமென்பது; எனவே, இவையும் எட்டாயின. விளிவில் கொள்கை--கேடில் கொள்கை. அங்ஙனங் கூறிய மிகையானே அழுகைக் கண்ணீர்போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு; அதனையும் அழுகைப்பாற் சார்த்தி உணரப்படும். “எழுதெழில் சிதைய வழுதன ளேங்கி யடித்தென வுருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரற் றிருகுபு கூர்நுதி மழுங்கிய வெயிற்ற ளூர்முழுது நுவலுநிற் காணிய சென்மே.” (அகம்-176) என்பது, பரத்தையை நீ யெள்ளினையென்று அழுதுவருகின்றா ளென்று தலைமகற்குச் சொல்லியதாகலின் இது1தன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. “கயமல ருண்கண்ணாய் காணா யொருவன்” (கலி-37) என்னும் பாட்டினுள், “தானுற்ற, நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும்” எனத் தலைமகன் இளிவந் தொழுகுவது காரணமாக, “சேயேன்மன் யானுந் துயருழப்பேன்” என்றமையின் இது 2பிறன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலச் சுவை பிறந்தது. இது கருணையெனவும்படும். “மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே” (புறம்-249) என்புழிக், கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடை கொடுத்தற்கு மெழுகுகின்றாளை, கண்ணீரே நீராக மெழுகு
1. தன் என்றது பரத்தையை. பரத்தை தன்னைத் தலைவனிகழ்ந்தமையின் தான் அவனால் இகழப்பட்டு எளியனாயினேன் என்று கருதியதனால் அவளுக்கு அழுகை பிறந்தது. இளிவரல் -- இழிவு. 2. பிறன் என்றது தலைவனை. தலைவன் பலநாளும் இளிவந்து ஒழுகல்பற்றித் தோழி. யானுந் துயருழப்பேன் என்றமையின். இது பிறன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலம் பிறந்தது. இவ்வவலம் அவன்மீதுகொண்ட கருணையாற் பிறந்தமையின் இது கருணை எனப்படுமென்றார். கருணையாற் பிறந்த அழுகையைக் கருணையென்றதுபசாரம். |