பக்கம் எண் :

624மரபியல்

இ--ள் : ஆண்பாற்பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் என்றவாறு.

‘பிறவும்’ என்றதனான், ஆணென்றும் விடையென்றும் வருவனபோல்வனவுங் கொள்க.

இவற்றை வரையறை கூறும்வழி (589--605) உதாரணங் காட்டுதும். ‘யாத்த வாண்பாற் பெயர்’ என்றதனால், போத்தென்பது இளமைப் பெயராமாயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறுபோலச் சிறவாது1அதற்கென்பது கொள்க.

(2)

[மரபுபற்றி வரும் பெண்பாற் பெயர் இவை எனல்]

558. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணு
மூடு நாகுங் கடமையு மளகு
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவு
மந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே.

இ--ள் : கூறப்பட்ட பதின்மூன்று பெயரும் பெண்மைப் பெயர் என்றவாறு.

2கடமையென்பதோர் சாதிப்பெயர் உண்டேனும் அதுவன்று, ஈண்டெண்ணப்பட்டது பெண்மைமேற்றென்று கொள்க.

‘அந்தஞ் சான்ற’ என்பது, முடிபமைந்தன இவையென்றவாறு; எனவே, ஆவென்பது பெண்பெயராதலும் பெண் ஆணென்பன ஒருசார் புல்லிற்கு நேர்தலுங் கொள்க; என்னை? 3ஆனேறென்பது, ஆவினுள் ஏறெனப்படுதலின்,4ஆனென்பது ஆண்பாற்கும் பொதுவாகலின் அது முடிபமையாதெனப்பட்டது; அது மேற்காட்டுதும். ஆண்மை பெண்மை புல்லிற்கு


1. அதற்கு--இளைமைப் பெயருக்கு.

2. கடமை--காட்டாவுக்கும் பெயர். ஆதலின் அதனைச் சாதிப்பெயர் என்றார்.

3. ஆன் என்றது--பசுப்பொதுவை. ஆனேறு என்புழி ஆ என்ற பெயர் ஆணுக்கும் வருதலால் இச்சூத்திரத்து முடிக்கப்படும் பெண்பாற் பெயர்களோடு சார்த்தி முடிக்கப்படாமையின் முடிபமையாதெனப்பட்டது என்றார்.

4. ஆனென்பது--ஆவென்பது என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தம், என்னை? னகரமெய் சாரியையாதலின்.