தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 163 |
படைச் செலவு வஞ்சியும், (4) அதற்கு மறுதலையாய், மலையவந்த பகைவரை நின்றார் எதிரூன்றித்தகைவது காஞ்சியும், (5) மதிலை வளைத்துக் கொள்ளுதல் உழிஞையும், (6) அதற்கு மறுதலையாய், அகத்தோர் தம் மதில்காத்தல் நொச்சியும், (7) சென்ற பகையோரும் நின்று தகைவாரும் தம்முட் பொருதல் தும்பையும், (8) போரில் வெல்லுதல் வாகையும், (9) எவ்வாற்றானும் புகழப்படுதல் பாடாணும், (10) இத்திணைகட்கெல்லாம் பொதுவாயுள்ளவை பொதுவியலும், (11) இரு மருங்கொவ்வா ஒருதலைக்காதல், கைக்கிளையும், (12) பொருந்தாக் காமம் பெருந்திணையும், எனப் பன்னிரு புறத்திணை பகரப்படுவன. இன்னும் இப்பின்னூலோர் இவற்றுள் முதலன ஏழே புறத்திணையெனவும், ஈற்றுறுமிரண்டும், அகப்புறமெனவும், இடைப்படு மூன்றும் புறப்புறமெனவும், தொகை பன்னிரண்டும் வகைபெறுமென்பர். காலத்தொடுபட்டு மரபு பிறழாமல் ஏற்புழி வழக்கொடு பொருந்தப் புகும் புதியதும், கடிதலின்றிப் போற்றற்குரியவாதல் கூடும். எனில், மிகையாகும் இப்புதிய புறத்திணைவகை பழைய தமிழ் முறையோடு முரணுவது மட்டுமன்று; இது செவ்விய வகுப்புமுறை யெதுவுமின்றித், தடை பலவற்றிற் கிடமும் தருகின்றது. முதற்கண், மேற்காட்டியாங்கு கரந்தை வெட்சியிலும் நொச்சி உழிஞையிலும் இப்பின்னூற் காஞ்சி தும்பையிலும் முறையே அதனதன் பகுதியாயடங்கியமைதலானும், எதிப்பற்ற வெட்சி வஞ்சி உழிஞை தும்பைகள் கருதொணாமை கண்கூடாதலானும், இவ்வாறு கூறுவன வேறாம் திணைகளெனப் பிரித்து வகுப்பதற்கிடமும், அதிற் சிறப்பும் காணற்கில்லை. இனி, திணையனைத்தும் ஒன்றிலொன்றடங்கா அகமும் புறமுமா யிருவேறு வகையா மெனக்கொண்ட பிறகு, திணை எதுவும் ஒன்று அகத்தது அன்றேல் புறத்தது எனப்படுதலன்றி, அகப்புறமாமென்றோர் புதுவகைப்படுத் தெண்ணுவது, பொய் பொய்யே யாவதன்றி, தனிப்பொய், பொய்ப்பொய், மெய்பொய் என முத்திறப்படுமெனல் போல், பொருளொடு பொருந்தாப் போலி முறையேயாகும். புறமெதுவும் அகவகையாகாதது போலவே, அகமெதுவும் எனைத்து வகையானும் புறனாகாமையும் ஒருதலையாத் தேறப்படும். அகத்தில் தனியகம் அகத்தகம் புறத்தகம் எனும் பாகுபாடின்மையால், புறத்துள்ளும் புறமேயன்றி புறப்புறமும் அகப்புறமும் வேறு கோடலமையாமையறிக. மெய்ப்பொய் ஒளியிருள் -பகலிராஎன்பனபோலவே, |