174 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
வேந்தனைமுன் வாழ்த்தினார் வெட்சி முனைஞரவன் ஈந்தபொருட் பாதிடுவா ரின்று. ” (பாதிடுதல் = பங்கிடுதல்) உண்டாட்டு = வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல்; “முட்காற் காரை முதுபழ னேய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கந் தார நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப் புலம்புக் கனனே . . . . . . . ” (புறம். 258) (கந்தாரம் = ஒருவகை மது. தலைச்சென்று = முன்சென்று. ) கொடை = வென்று கொண்டோர், துடியன், கணி, பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்துவத்தல்; “இளமா எயிற்றி! இவைகாண் நின்ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் துடியன் கொலைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர் தம்முன்றில் நிறைந்தன. ” (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) “. . . . புல்லணற் காளை யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும். ” (புறம். 258) என வந்த ஈரேழ் வகையிற்றாகும் = என்று இவ்வாறு எண்ணப்பட்ட பதினான்கு வகைப்படும் (வெட்சித்துறைகள்). குறிப்பு: செலவே, வேயே, மாற்றே என்பனவற்றுள் ஏகாரம் அசைநிலை; எண் ணேகார மெனினும் அமையும். வெட்சித் துறை யென்பது மேற்சூத்திரத்தி னின்றும் அவாய்நிலை எழுவா யாயிற்று. |