302 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப் பொறிப்புண ருடம்பிற் றோன்றியென் னறிவுகெட நின்ற நல்கூர் மையே. ” - புறம். 266 (9) பெற்றபின்னரும் பெருவளனேத்தி நடைவயிற்றோன்றும் இருவகை விடையும் = பரிசில் பெற்றபின்னும் (பெறுமுன் ஏத்தியது போலவே) பெற்றோன் ஈந்தோனை மீக்கூறிப்புகழ்ந்து இரவலன் தானே விடைவேண்டலும் அவனுக்குப்புரவலன் விடைதரலும் ஆகிய உலகவழக்கில் பயின்றுவரு மிருவகை விடைகளும்; (1) பரிசிலன் விடைவேண்டற்குச் செய்யுள் : “. . . . . . . . . . . . . . . . . . எல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ! சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக, வல்லே அகறி ரோவெம் ஆயம் விட்டெனச் சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றரத்தர யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மை தீர வந்தனென்” - பொருநராற்றுப்படை. வரி ; 118 - 129 இவ்வடிகளில், பரிசிலன் பன்னாள் கரிகாற் புரவலனோடிருந்து, தனதூர்செல்ல விடைகேட்க அவன் பிரிவுக்கு வருந்திப் பின்னும் அவன் வறுமையும் வேட்கையும் தீர ஈந்தனுப்பியது கூறுதலால், இது இரவலன் விடைகேட்குந் துறையாதல் காண்க. (2) புரவலன் தானே விடைதரற்குச் செய்யுள் : “தடவுநிலைப் பலவினாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற, செந்நாப் புலவீர்! |