378 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு” (குறள். 1097) என்பதில் தலைவியின் செறுநோக்கின் அன்புண்மையைக் கண்ணினும், சிறுசொல்லின் அன்புண்மையைச் செவியினுமாகத் தலைவன் தன்னுண்ணுணர்வால் திண்ணிதி னுணர்தல் காண்க. இனி, ‘கண்ணிற் சொலிச் செவியினோக்கும்’ என வரும் பாட்டான் அகத்திற்போலப் புறத்திலும் மன்னர் உள்ளுணர்வுகளைக் கண்ணினும், செவியினும் நுண்ணிதின் உணருமாறுங் கருதுக. மெய்ப்பாட்டியலுரை முற்றிற்று. |