தங்கால் முடக்கொல்லனார் (பி-ம். முடிக்கோலவனார், முடக்கோவலனார்.) (பி-ம்.) 1. ‘தினைக்கிளி கடிதெனிற்’; 2. ‘வருதலு’; 4. ‘வனைத்தற்கு’ 6. ‘ஐதேய்கம்ம’, ‘ஐதேகம்ம’, ‘ஐதெமக்கம்ம’, ‘வைதேஎ யகமயானேய’.
(ப-ரை.) தினை கிளி கடிகெனின் - தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின், பகல் ஒல்லும் - பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும், அங்ஙனம் இன்மையின்,இரவு நீ வருதலின் - இராக் காலத்து நீ வருதலினால், ஊறுஅஞ்சுவல் - வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன், எம் இடும்பை நோய்க்கு - துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு, யாங்கு செய்வாம் - எவ்வாறுபரிகாரம் செய்வேம், என ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு -என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு, ஓங்கு மலைநாடன் - உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன்,பிறிது செத்து - வேறு ஒன்றை நினைத்து, உயிர்த்தோன் -அந்நினைவினால் வெய்துயிர்த்தான்; காமம் ஐது - காமநோய் நுண்ணியது; யான் - அவனது குறிப்பை உணர்ந்தயான், கழி முதுக்குறைமையும் - நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும், பழியும் - பழிக்குக் காரணமும்ஆம், என்றிசின் - என்றேன்.
(முடிபு) என யான் கூறிய அனைத்திற்கு நாடன் உயிர்த்தோன்; காமம் ஐது; யான் முதுக்குறைமையும் பழியும் என்றிசின்.
(கருத்து) தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.
(வி-ரை.) உம்மை இரண்டும் அசை நிலைகள். எம் நோய் என்றாள்காம நோயால் தலைவி துயருறவும் அது கண்டு தான் துயருறவும்காரணமாதலின். அனைத்திற்கு - அவ்வள விற்கெனலும் ஆம் (குறள். 1129, உரை), ஐது - மெல்லிதெனலும் ஆம்: “மலரினு மெல்லிது காமம்” (குறள். 1289.)