பக்கம் எண் :

குறுந்தொகை


408


மாட்டு - மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில்வல்ல தலைவர் திறத்தில், விடர் முகை அடுக்கத்து - பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில் உள்ள,விறல்கெழு சூலிக்கு - வெற்றி பொருந்திய துர்க்கைக்கு,கடனும் பூணாம் - பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்;கை நூல் யாவாம் - கையில் காப்பு நூலைக் கட்டோம்;புள்ளும் ஓராம் - நிமித்தத்தையும் பாரோம்; விரிச்சியும்நில்லாம் - நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்;உள்ளலும் உள்ளாம் - நினைத்தலையும் செய்யோம்.

     (முடிபு) தோழி, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, கடனும் பூணாம்; யாவாம்; ஓராம்; நில்லாம்; உள்ளாம்.

     (கருத்து) நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர்கடனாம்.

     (வி-ரை.) விறல் - மிடுக்குமாம். சூலத்தை உடைமையின் கொற்றவையைச் சூலியென்றாள். கடன் - பராய்க்கடன், பிரிந்த தலைவர் மீண்டுவந்து சேர்ந்து, பின் பிரியாது உறைய வேண்டுமென்று கொற்றவையைவழிபடுதலை இங்கே தலைவி குறித்தாள். முருகக் கடவுளையும் இங்ஙனம்வழிபடும் மரபு, “கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை, எழீஇப் பாடும்பாட்டமர்ந் தோயே” (பரி. 14:23-4) என்பதனாலும், ‘பிரிந்த கேளிர்வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை யெழுவிநின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய்’ (பரிமேல்.) என்னும்அதன் உரையாலும் அறியப்படுகின்றது.

     தலைவர் மேற்கொண்ட வினை நன்கு முடிய வேண்டும் என்றுகடம்பூணுதலும் உண்டு;

   
“செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும்  
   
 ஐயம ரடுகென வருச்சிப் போரும்”்               (பரி. 8:107-8.)  

     தலைவரைப் பிரிந்த மகளிர் அவர் மேற்கொண்ட வினை நன்குமுடிந்து விரைவில் வந்து சேர வேண்டும் என்று கருதி நோன்பிருத்தல்வழக்கம். அந் நோன்பு நோற்குங்காற் கையில் காப்பு நாணணிவர்;

   
“பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை  
   
 வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து”      (நெடுநல். 141-2.)  

     புள் ஓர்த்தல் - நிமித்தம் பார்த்தல் (மலைபடு. 448, ந.); தலைவர்வருதற்குரிய நன்னிமித்தங்களைப் பார்த்தல். விரிச்சி- நற்சொல்; தலைவர்வரவைக் குறிப்பால் தெரிவிக்கும் நற்சொல். பிரிந்த தலைவரது வருகையை விரிச்சி பார்த்து நின்றறியும் மரபை,

   
“நாழி கொண்ட நறுவீ முல்லை  
   
 அரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது  
   
 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்  
   
 சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்  
   
 உறுதுய ரலமர னோக்கி யாய்மகள்  
   
 நடுங்குசுவ லசைத்த கையள் கைய