ஆரவாரத்தை உடைய விழாவிற்கு, செல்வாம் செல்வாம்என்றி - போவோம் போவோமென்று கூறினாய்; அன்றுஇவண் நல்லோர் நல்ல பல - அன்று நாம் புறப்படுகையில்இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்களாகியநிமித்தங்கள் பலவாக இருந்தன; தழலும் தட்டையும் - கிளிகடி கருவிகளாகிய தழலையும் தட்டையையும், முறியும் - தழையையும், தந்து - எனக்குக் கொடுத்து, இவை நினக்குஒத்தன என - இப் பொருள்கள் உனக்கு ஏற்புடையனஎன்று சொல்லி, பொய்த்தன கூறி - பின்பு புனைந்துரைகளைக்கூறி, அன்னை ஓம்பிய ஆய்நலம் - நம்முடைய தாய்பாதுகாத்த அழகிய எம் பெண்மை நலத்தை, என்னைகொண்டான் - என்னுடைய தலைவன் கொள்ளை கொண்டான், யாம் இனி இன்னம் - யாம் இப்பொழுது அந்நலன்இழந்த இத்தகையே மாயினோம்.
(முடிபு) செல்வாம் செல்வாம் என்றி; நல்ல பல; நலம் என்னைக்கொண்டான்; யாம் இனி இன்னம்.
(கருத்து) தலைவனால் நலன் இழந்தமை நினைந்து வேறுபட்டேன்.
(வி-ரை.) தலைவியும் தோழியும் விழவின்கட் சென்று தலைவனைஎதிர்ப்பட்டு அளவளாவிய பழைய நிகழ்ச்சியைத் தலைவி நினைவுறுத்தினாள். விழாக் காலத்து வீரர்கள் குழுமுதலும் மகளிர் துணங்கை ஆடுதலும் வழக்கு; குறுந். 31.
செல்வாம் செல்வாமென்றது பன்முறை வற்புறுத்தியதைப் புலப்படுத்தியது. அன்று - புறப்பட்ட நாளில். நல்லவென்றது நல்ல நிமித்தமாகிய வாய்ச் சொல்லை; இதனைப் புள்ளென்றும் விரிச்சி என்றும் கூறுவர்; “நல்ல நல்லோர் வாய்ப்புள்” (முல்லைப்.18)தில், காலங்குறித்தது;பலவாகியும் யான் நலன் இழந்தேன் என்பது பயந்து ஒழியிசைப்பொருள்பட நின்றதெனலும் ஆம்.
தழல் - கையால் சுற்றின காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி;கவண் என்பாரும் உளர் (குறிஞ்சிப். 43, ந.)தட்டை - கிளிகடி கருவியுள் ஒரு வகை; குறுந். 193, குறிப்புரை.
முறி - தழை; என்றது தழையால் ஆகிய உடையை; தளிர் எனலுமாம்; விளா, புன்கு முதலியவற்றின் தளிர்களை மகளிர் அப்பிக் கொள்ளுதல் வழக்காதலின் அவற்றை அளித்தான்;
| “வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா” (முருகு. 37); |
| “பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி |
| சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி” (நற். 9:5-6); |
| “எழிற்றகை யிளமுலை பொலியப் |
| பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே” (ஐங். 341:2-3.) |
பொய்த்தன கூறல் என்றது தலைவன் பொய் பாராட்டியதை.