கபிலர். (பி-ம்.) 2. ‘றிணைபிடி’, ‘பெருங்கணணாட’; 3. ‘துலந்த’; 5. மறந்தனை யாயின்’, ‘மறந்தமையாயின்’; 7. ‘னினக்கே’.
(ப-ரை.) கன்று தன் பயம் முலை மாந்த - யானைக்கன்று தனது பாலுள்ள முலைகுடித்து நிற்ப, முன்றில் தினை - வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை, பிடி உண்ணும் - பெண் யானை உண்ணுதற்கு இடமாகிய, பெரு கல் நாட - பெரிய மலைகளை உடைய நாடனே, கெட்ட இடத்துஉவந்த உதவி - தான் வறுமையுற்ற காலத்துப் பிறரால்பெற்று மகிழ்ந்த உதவியை, கட்டில் வீறு பெற்று - அரசுகட்டில ாகிய சிறப்பைப் பெற்று, மறந்த மன்னன் போல - மறந்து விட்ட அரசனைப் போல, நன்றி மறந்து - நீ யாம்செய்த நன்றியை மறந்து, அமையாய் ஆயின் - பொருந்தாயாகி அதனை நினைந்து வரைந்து கொள்வாயாயின்,இவள் - இத்தலைவியினுடைய, மெல்சீர்கலி மயில் கலாவத்துஅன்ன - மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும்மயிலினது பீலியைப் போன்ற, ஒலி மெல் கூந்தல் - தழைத்தமெல்லிய கூந்தல் பகுதிகள், நினக்கே உரிய ஆம் - நினக்கேஉரிமை உடையனவாகும்.
(முடிபு) நாட, நன்றி மறந்து அமையாயாயின், இவள் கூந்தல் நினக்கே உரியவாம்.
(கருத்து) நீ யாம் புரிந்த நன்றியை மறவாது விரைவில் வரைந்துகொள்ள வேண்டும்.
(வி-ரை.) கெட்ட இடம் கெட்டிடமாயிற்று; தொகுத்தல் விகாரம்.கட்டில் வீறு - அரசு கட்டிலாற் பெற்ற சிறப்பெனலுமாம்; கட்டில் - சிங்காதனம். நன்றி மறந்து அமையாயாயினன் என்றது, நன்றி மறவாதுஅமைவாயாயின் என்னும் பொருள் தந்தது.
தான் நல்ல நிலைக்கு வருந்துணையும் பிறர் உதவியை உவந்துபின்அதனை மறந்தது போல, நீ நின் விருப்பத்தை நிறைவேற்றும் வரையில்