மிளைக்கந்தன். (பி-ம்) 5. ‘அதுவே’, ‘வெய்ய’; 6. ‘லவ்வன்பின்’, ‘அன்பினபாலே’.
(ப-ரை.) ஐய -, என் தோழி - என் தோழியாகியதலைவி, வேம்பின் பசுகாய் - வேம்பினது பசிய காயை,தரின் - முன்பு தந்தால், தேம் பூ கட்டி - இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி, என்றனிர் - என்று பாராட்டிக் கூறினீர்;இனி - இப்பொழுது, பாரி பறம்பில் - பாரி யென்னும்வள்ளலுக்குரிய பறம்பென்னும் மலையிடத்திலுள்ள, தைதிங்கள் தண்ணிய - தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய, பனிசுனை தெள் நீர் தரினும் - குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும், வெய்ய உவர்க்கும் என்றனிர் -வெப்பத்தையுடையனவாகி உவர்ப்புச் சுவையைத்தருமென்று கூறினீர்; அன்பின்பால்- நுமது அன்பின் பகுதி,அற்று - அத்தகையது.
(முடிபு) ஐய, என் தோழி வேம்பின்காய் தரின் கட்டி என்றனிர்;இனி, தண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றனிர்; அன்பின்பால்அற்று.
(கருத்து) முன்பு நீர் தலைவிமாட்டு அன்புடையராயிருந்து இப்போது அவ்வன்பு இல்லீராயினீர்.
(வி-ரை.) “இயல்பாகவே கைப்புடையதாகிய வேப்பங்காய் முன்புதலைவியின் கைப்பட்டகாரணத்தால் நுமக்கு இனிதாயிற்று; இயல்பாகவேஇனிய நீர் இவள் கைப்பட்ட காரணத்தால் இப்பொழுது நுமக்குஉவர்ப்புடையதாயிற்று. அன்றும் இவளே தந்தனள்; இன்றும் இவளேதந்தனள். ஆயினும் நும்பால் இம்மாறுபாடு உண்டாயதன் காரணம் நும்அன்பு மாறியதேயாம்” எனத் தோழி கூறினாள்.
“ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது, வானோ ரமுதம் புரையுமாலெமக்கென” (தொல். கற்பு. 5) மகிழ்பவனாதலின் வேம்பினை வெல்லக்கட்டி யென்றாள்.
கட்டி - கற்கண்டுமாம். பாரி - ஏழு வள்ளல்களுள் ஒருவன். இவன்வாழ்ந்த மலை பறம்பு. அதன்கண் உள்ள சுனை பாராட்டப்படும் மரபு,
| “கடும்பரிப் புரவிக் கைவண் பாரி |
| தீம்பெரும் பைஞ்சுனை” (அகநா. 78:22-3) |
என்பது முதலியவற்றால் அறியப்படும்.
தை மாதத்தில் சுனைநீர் மிகக் குளிர்ந்திருக்கும். தண்மையும்உண்ணுதற் கினிமையுமுடைய சுனைநீரை வெய்ய வென்றும் உவர்க்கும்என்றும் கூறியமை அவனது அன்பின் திரிபைப் புலப்படுத்தியது. அற்ற -அத்தகைய மாறுபாட்டை யுடையது. ஆல், ஏ: அசை நிலைகள்.
மேற்கோளாட்சி 1-2. ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோரமுதம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற்கண் தலைவன்கூறிய கூற்றினைத் தோழி கொண்டு கூறியது (தொல். கற்பு. 5, இளம்,ந.)
மு. தாம் எளியராகிய கற்புக் காலத்திலே, களவுக் காலத்துத் தமதுபெருமையை உணர்த்திய வருத்தத்தின் கண் தோழி கூறியது. (தொல்.கற்பு.9, இளம், ந.); பாங்கி அன்பிலை கொடியை யென்று இணர்த்தார்மார்பனை இகழ்ந்தது (நம்பி. 206; இ.வி. 555.)
ஒப்புமைப் பகுதி 2. கட்டி: (பெருங். 2. 4:93); “சாறட்ட கட்டியே”(யா.வி. 62, மேற்: ‘வையகமெல்லாம்’.)
பாரி பறம்பு : சிறுபாண். 91; அகநா. 303:10; புறநா. 108:4-5, 109:1, 110:2, 113:7, 118:5, 158:4.
பாரி பறம்பிற் சுனை: “அளிதோ தானே பாரியது பறம்பே..மீன்க ணற்றதன் சுனையே” (புறநா. 109:1-10.)
3.மு. புறநா.176:9, 337:6.
தைத்திங்கள் நீர் தண்ணிது : “தைஇத் திங்கட் டண்கயம்”(நற். 80:7); “தைஇத் தண்கயம்” (ஐங். 84:4); “தைஇத் திங்கட் டண்கயம்போல” (புறநா. 70:6.)
மு. | “தீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வற்குச் சிற்றெலும்பு |
| பூம்பாவை யாக வருள்வோன்றென் வெங்கைப்பொருப்பிலிளங் |
| காம்பான தோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம் |
| வேம்பா முனக்குக் கரும்பா யினுமின்று வேலவனே” |
| (வெங்கைக் கோவை. 403.) |
(196)