பேரி சாத்தன் (பி-ம். வேரிசாத்தன.்) (பி-ம்.) 1. ‘யுள்ளியவந்தளிர்’; 6. ‘தேர்ப்பன வேர்ப்பன’, ‘தொப்பனவொப்பன வுண்ணும்’; 7. ‘பார்ப்படை’.
(ப-ரை.) தோழி , கடுவன் - ஆண் குரங்கு, ஊழுறு தீங்கனி உதிர்ப்ப - முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின்மேல் இருந்து உதிர்க்க, கீழ் இருந்து - அம்மரத்தின் கீழே இருந்து, ஏற்பன ஏற்பன உண்ணும் - ஏற்பவற்றை ஏற்பவற்றைத் தின்னுகின்ற, பார்ப்புடை மந்திய மலை இறந்தோர் - குட்டிகளை உடைய பெண் குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்ற தலைவர், உறு வளி உளரிய - மிக்க காற்றுக் கோதிய, அம் தளிர் மாஅத்து - அழகிய தளிரை உடைய மாமரத்தினது, முறி கண்டன்ன - தளிரைக் கண்டாற் போன்ற, மெல் என் சிறு அடி - மெல்லிய சிறிய அடியை உடைய, சிறு பசு பாவையும் எம்மும் உள்ளார் - சிறிய பசிய தாது முதலியவற்றால் செய்த விளையாட்டுப் பாவையையும் எம்மையும் நினையார்; கொடியர் - அவர் கொடுமையை உடையர்.
(முடிபு) தோழி, மலையிறந்தோர் உள்ளார் கொடியர்.
(கருத்து) தலைவர் எம்மை நினைந்திலர்.
(வி-ரை.) தலைவன் இயற்றித் தந்த பாவையாதலின் அதனை முற்கூறினாள். ‘கடுவன் தன் மந்தியையும் பார்ப்பையும் அகலாது அவற்றிற்குரிய கனியை உதிர்க்கும் மலையைக் கண்டும் அவர் என்னையும் பாவையையும் அகன்று உறைந்தார்; அவர் கொடுமை இருந்தவாறு என்னே!' என்பது தலைவியின் கருத்து. வாழி, ஏ: அசை நிலைகள்.
மேற்கோளாட்சி 6-7. பார்ப்பென்னும் இளமைப் பெயர் குரங்கிற்கும் உரியது (தொல். மரபு. 14, பேர்.)
ஒப்புமைப் பகுதி 1. வளி உளர்தல்: குறுந். 273: 2. அந்தளிர்மா: "பைங்கான் மாஅத் தந்தளிர்" (குறுந். 331:6). 3. பாவை: குறுந். 48:1, ஒப்பு.
பாவையும் தலைவியும்: ஐங். 383:5-6; பெருங். 2.15:112;திருச்சிற். 200, உரை.
4. தலைவனைக் கொடிய னென்றல்: குறுந். 26:8, ஒப்பு.
வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு. 5. ஊழுறு தீங்கனி: அகநா.2:2.
4-5. ஆண்குரங்கு பழத்தை உதிர்த்தல்: "ஆய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்த, துய்த்தலை வெண்காழ்" (அகநா. 7:20-21.)
7. பார்ப்புடை மந்தி: குறுந். 29:6, ஒப்பு.
(278)