அம்மூவன். (பி-ம்.) 4. ‘மாஅத் தாதமர்’: 5. ‘வண்டுவீழ்வ பயருங்’; 6. ‘றெண்கடற்’.
(ப-ரை.) என் நெஞ்சே--, மெல்லிய இனிய - ஓசையால்மெல்லியனவும் பொருளால் இனியனவும், மேவரு தகுந -விரும்பத்தக்கனவுமாகிய, இவை - இச்சொற்களை, மொழியாம் - மொழியேம், என சொல்லினும் - என்று நினக்குநான் சொன்னாலும், காமர் மாஅத்து - அழகிய மாமரத்தினது,தாது அமர் பூவின் - தாதுகள் பொருந்திய மலரினிடத்து,வண்டு பல உடன் - வண்டுகள் பல ஒருங்கே, வீழ்புஅயரும் - வீழ்தலைச் செய்யும், கானல் - சோலையையுடைய, தண்கடல் சேர்ப்பனை - தண்ணிய கடற்கரையையுடைய தலைவனை, கண்டபின்--, நீ அவை மறத்தியோ -நீ நான் கூறிய அவற்றை மறந்து விடுகின்றாயோ?
(முடிபு) நெஞ்சே, மொழியாமெனச் சொல்லினும் சேர்ப்பனைக்கண்டபின், நீ அவை மறத்தியோ?
(கருத்து) தலைவனைக் காணின் எல்லாத் துன்பங்களையும் மறந்துவிடுகின்றேன்.
(வி-ரை.) கானல் - கடற்கரைச்சோலை. தலைவன் வரையாதுவந்தொழுகுதலை விரும்பாத தலைவி, ‘அவன் வரின் இன்மொழி கூறேன்’என’ எண்ணியிருந்தும், அவன் வந்த காலத்து நெஞ்சின்கண் உள்ளஆதரவினால் மீட்டும் இன் மொழி கூறி அளவளாவினாள். அவனைக்கண்டவுடன் தான் கொண்டிருந்த உறுதி தளர்ந்து போதலை இதிற்கூறினாள்;
| “புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சம் |
| கலத்த லுறுவது கண்டு” (குறள், 1259.) |
வாழி : அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1-2. “மெல்லிய வினிய மேவரக் கிளந்து” (குறிஞ்சிப். 138.)
3. வாழி யென் னெஞ்சே: குறுந். 11:4.
4-5. கடற்கரைச் சோலையில் மாமரம் இருத்தல்: “கொக்கார்கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்” (கைந்நிலை, 55.) ‘மாஞ்சோலைநிறைந்த வளைந்த கழியினையுடைய பொருந்திய நீர்த்தண்சேர்ப்பன்’ என்பது இதன் பழையவுரை.
(306)