இளம்பூதனார். (பி-ம்) 1. ‘பைந்தோடு’, ‘செவ்வாய்ப் பெருந்தோட்’ 4. ‘இருநீர்ச்’,‘பெருநீர்ச்’.
(ப-ரை.) தோழி--, சிறு வெள் காக்கை - சிறிய வெண்மையையுடைய காக்கையினது, செ வாய் பெருதோடு -செவ்விய வாயையுடைய பெரிய தொகுதி, எறி திரைதிவலை ஈர்ம்புறம் நனைப்ப - வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமாகிய புறத்தை நனைக்க, பனி புலந்து -அக்குளிரை வெறுத்து, உறையும் பல் பூ கானல் - தங்குதற்குஇடமாகிய பல மலர்களையுடைய சோலையையுடைய,விரி நீர் சேர்ப்பன் நீப்பின் - அகன்ற கடற்கரையையுடையதலைவன் பிரிந்தால், நாம் இழப்பது - நாம் இழக்கும்பொருள், நம் இன் உயிர் அல்லது - நமது இனிய உயிரையன்றி, பிறிது ஒன்று எவன் - வேறொன்று யாது?
(முடிபு) தோழி, சேர்ப்பன் நீப்பின் நாம் இழப்பது உயிரல்லதுபிறிதொன்று எவன்?
(கருத்து) தலைவனது பிரிவை யான் ஆற்றேன்.
(வி-ரை.) சிறுவெண்மை யென்றது கழுத்திலுள்ள நிறத்தை.காக்கையின் உள்வாய் சிவந்திருக்கும்.
‘நாமிழப்பது பிறிதொன்றெவன்?’ என்றது, தோழிபாற் செறலைப்புலப்படுத்தியது; “நம்மிடம் இழப்பதற்கு உயிரையன்றி வேறு என்னபொருள் இருக்கிறது?” என்று வினாவியது, ‘இதனை நீ அறிந்தும்அறியாள்போல் என்னை வினவினை’ என்னும் நினைவிற்று.
எவனோ : ஓ அசை நிலை. ஏ : அசை நிலை.
(மேற்கோளாட்சி) மு. சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்துழித் தலைவி இரங்கித்தன் வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையும்படக் கூறியது(தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. சிறுவெண் காக்கை: குறுந். 246:1, ஒப்பு.
பறவைகளின் தொகுதியைத் தோடென்றல்: குறுந். 34:4, வி-ரை.
4-6. தலைவன் பிரியின் தலைவி உயிர் நீங்குதல்: குறுந். 32:6, ஒப்பு. 57:3-4, ஒப்பு. 103:6, 169:6, 197: 4-5, 273:8, 290 : 3-6,319: 7-8; அகநா. 52:13, 95:4-5.
(334)