குன்றியன். (பி-ம்) 1. ‘செறுவார்க்’ 2. ‘ஈங்கினம்’.
(ப-ரை.) தேம் பாய் துறைவ - தேன் பரவுகின்றதுறையையுடைய தலைவ, செறுவர்க்கு உவகை ஆக -பகைவருக்கு மகிழ்ச்சி உண்டாக, தெறுவர - எமக்குத்துன்பமுண்டாகும்படி, ஈங்கனம் வருபவோ - இங்கேஅறிஞர் வருவரோ? நீ பிரிந்திசினோள் - நீ பிரிந்த தலைவி,சிறு நா ஒள் மணி - சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள்,விளரி ஆர்ப்ப - விளரிப் பண்ணைப் போல முழங்க,கடுமா நெடு தேர் நேமி போகிய - விரையும் குதிரையைப்பூண்ட நெடிய தேரினது சக்கரம் மேலே ஏறிப்போனமையால் நலிந்த, இருகழி நெய்தல் போல - கரிய கழியினிடத்துள்ள நெய்தல் மலரைப் போல, வருந்தினள் - வருத்தத்தையடைந்தாள்; அளியள் - இரங்கத்தக்காள்.
(முடிபு) துறைவ, வருபவோ? நீ பிரிந்திசினோள் வருந்தினள்;அளியள்.
(கருத்து) நீ இரவில் வருதல் நன்றன்று.
(வி-ரை.) செறுவர்க்கு உவகையாக வென்றது நினக்கு ஏதம் நேரும்என்றபடி. விளரி - இரங்கற்பண்; நெய்தனிலத்துக் குரியது. தலைவன்தேரேறிக் கடற்கரை வழியே வரும் வழக்கமுடையனாதலின் அவனறிந்தஉவமையையே எடுத்துரைத்தாள்.
நீ பிரிந்திசினோளென்றது களவுக்காலத்தில் இடையிடையே உண்டாகும் பிரிவினை நினைவுறுத்தியது; இதனால் என்றும் பிரியாதுறைதலே வேண் டற்பாலதென்பதும், அதற்கு வரைதலே தக்கதென்பதும் உணர்த்தப்பட்டன.
பிரிந்திசினோள்: இசின் படர்க்கைக்கண் வந்தது.
(மேற்கோளாட்சி) மு. தலைவன் இரவுக்குறி நயந்தானைத் தோழி மறுத்தது தொல். களவு. 22, ந.)
ஒப்புமைப் பகுதி 3. சிறுநா வொண்மணி: நற். 267:9.
3-4. தலைவன் தேர்மணி யொலிக்க வருதல்: குறுந். 155:4-7,ஒப்பு. 212:1-3.
5. கழிநெய்தல்: குறுந். 9:4-5, ஒப்பு.
4-5. தேரின் நேமியால் நெய்தல் குறைதல்: குறுந். 227:1-3, ஒப்பு.
(336)