(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)
 72.   
பூவொத் தலமருந் தகைய வேவொத் 
    
தெல்லாரு மறிய நோய்செய் தனவே 
    
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப் 
    
பரீஇ வித்திய வேன்ற் 
5
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே. 

என்பது தலைமகன், தன் வேறுபாடு கண்டு வினாய பாங்கற்கு உரைத்தது.

மள்ளனார்.

    (பி-ம்.) 1.தலம்வருந்.

    (ப-ரை.) தேமொழி - இனிய மொழியினையும், திரண்ட மெல்தோள் - பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பரீஇ வித்திய ஏனல் - பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண், குரீஇ ஓப்புவாள் - அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டு கின்றவளது, பெரு மழை கண் - பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள், பூ ஒத்து அலமரும் தகைய - பூவினை அழகில் ஒத்துச் சுழலுந் தன்மையை யுடையன; ஏ ஒத்து - ஆயினும் கொடிய தொழிலால் அம்பினை ஒத்து, எல்லாரும் அறிய - நின்னைப் போன்ற யாவரும் என்னுடைய வேறுபாட்டை அறியும்படி, நோய் செய்தன - எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

    (முடிபு) குரீஇ ஓப்புவாள் கண் நோய் செய்தன.

    (கருத்து) நான் ஒரு மலைவாணர் மகள்பால் நட்பு பூண்டு காமநோய் உற்றேன்.

    (வி-ரை.) பூ - தாமரைப் பூ; குவளையுமாம். கண்கள் பூவைப் போலக் காண்டற்கு இனிமைதந்து தாம் வெருண்டன போலச் சுழலுமாயினும் என்பால் அம்புபோற் கொடியனவாகி அவ்வம்பாலுண்டாகி யாவரும் அறியும் புண்போன்ற காமநோயைத் தந்தனவென்று பொருளை விரித்துக் கொள்க. அலமருந்தகையவென்றான், தான் வரும் திசையறியாது சுற்றெங்கும் நோக்கியதை முன்பு அறிந்தமையின்; 'வடிக்கண் பரப்பி யென்றான், இன்ன திசையால் வருமென்றறியாது சுற்றெங்கும் நோக்குதலின்' (திருச்சிற். 34, பேர்.) எல்லோரு மென்றானேனும் கருதியது பாங்கனையென்க; நீ அறிந்தமையின் இங்ஙனமே யாவரும் அறிவரெனலும் ஒன்று. நோய் - காமநோய், தேமொழித் திரண்ட மென்றோளென்ற அடைகளும் உடம்படுபுணர்த்தும் வாயிலாக அமையும் நோய்க்குக் காரணமாயின வென்பதைப் புலப்படுத்தின. முன்னார்க் குருவியோப்புங் குரலினிமையை அறிந்தவனா தலின் தேமொழி யென்றும், பின்னர்ப் பழகித் தோள் இயல்பறிந்தவனாதலின் திரண்ட மென்றோளென்றும் அம் முறையே வைத்துக் கூறினான். தினை வளர்ந்த இடத்திற் பருத்தியை விதைத்து அத்தினை முதிர்ந்து கொய்யப்பட்ட பின்னர்ப் பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாணர் வழக்கம். பருத்திக்குரிய பெயராகிய பருவியென்பது பரீஇயென்றும், குருவியென்பதுஉ குரீஇயென்றும் வந்தன. இங்ஙனமே மருவி - மரீஇ, உருவி - உரீஇ என வினைச் சொற்களும் வருதல் காண்க.

    'மாமலைப் பரீஇ வித்திய வேன்ற் குரீஇ யோப்புவாள்' என்பது தலைவியென்னும் துணையாக நின்றது. பெருமழைக் கண்ணென்றான், கண் பெரிதாதல் மகளிர்க்கு இலக்கண மாதலின்; கலி. 108: 2-3, பார்க்க.

    (மேற்கோளாட்சி) மு. இக்குறுந் தொகையுள் குரீஇ யோப்புவாள் கண்ணென வழிநிலைக் காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்குரிய இளவேனிலும் பகற்பொழுதும் காட்சிக்கண் வந்தன' (தொல். அகத். 16, ந.).

    ஒப்புமைப் பகுதி 4. நீரையேற்ற பசுங்கலம்: "பருவி வித்திய பைந்தாட் புனம்" (பெருங். 1. 50: 16). 4-5.பருத்தியை விதைத்த புனத்திற் குருவியை ஓட்டுதல்: "பருவி விச்சி மலைச் சாரற் பட்டை கொண்டு பகடாடிக், குருவி யோப்பிக் கிளிகடிவார்" (தே. சுந்தர.திருவையாறு).

    ஏனலிற் குருவி யோட்டுதல்: "உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல், பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி" (அகநா. 388: 4-5).

    2-5. கண் நோய் செய்தல்: "தேம்பாய வவிழ்நீலத் தலர்வென்ற வமருண்கண்... நிறம்பாய்ந்த, கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்", "நீரலர் நீல மெனவவர்க் கஞ்ஞான்று, பேரஞர் செய்தவென் கண்" (கலி. 57: 9-15, 143: 50-51); "நிறைமதி வாண்முகத்து நேர் கயற்கண் செய்த, உறைமலி யுய்யா நோய்" (சிலப். 7:8); "கருநெடுங் கண்டருங் காம நோயே" (பழம்பாடல்); "சேற்றுக்கானீலஞ் செருவென்ற வேந்தன்வேல், கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல், தோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம், வேற்றுமை யின்றியே யொத்தன மாவேடர், ஆற்றுக்கா லாட்டியர் கண்" (யா. வி. 62, மேற்.) 1-5. கண்ணிற்குப் பூ: குறுந். 101:4, ஐங்.16:4, கலி. 28:18, 33: 9, 39:51, 75:31. 142:11. கண் அலமருதல்: "அலமர லுன்கண்ணார்", "அலமர லமருண்க ணந்நல்லாய்" (கலி. 73:12, 113:2)

(72)