வாயிலிளங் கண்ணன்.     (பி-ம்) 1. ‘முனைக்கோட்’ 7. ‘நயந்துதான் மயங்கிச்’ 8. ‘செல்லவு’.  
    (ப-ரை.)  தோழி--, நாகு பிடி நயந்த - இளம்பிடியைவிரும்பிய, முளை கோடு இள களிறு - மூங்கில் முளையைப்போன்ற கொம்பையுடைய இளைய களிறு, குன்றம் நண்ணி - மலையிடத்தே பொருந்தி, குறவர் ஆர்ப்ப - அங்குள்ளகுறவர் முழங்கியதனால், மன்றம் போழும் - ஊரிடத்துள்ளமன்றத்தைப் போழ்ந்து செல்லும், நாடன் - நாட்டையுடையதலைவன், காலை வந்து - பகலில் வந்து, சுனை பூ குவளைதொடலை தந்தும் - சுனையில் மலர்ந்த குவளைமலர்மாலையை நினக்குத் தந்தும், தினை புனம் மருங்கில் - தினைக்கொல்லையினிடத்தில், படு கிளி ஓப்பியும் - வீழ்கின்றகிளிகளை நம்மோடு ஓட்டியும், மாலை பொழுதில் - பிறகுவந்த மாலைக்காலத்தில், நல் அகம் நயந்து - நல்லநெஞ்ச	த்தின் கண்ணே ஒன்றை விரும்பி, உயங்கி - வருந்தி,சொல்லவும் ஆகாது - அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும்எழுச்சி பெறாமல், அஃகியோன் - குறைவுற்றான்.
	     (முடிபு)  தோழி, நாடன் காலைவந்து தந்தும் ஒப்பியும் மாலைப்பொழுதில் நயந்து உயங்கி அஃகியோன்.
     (கருத்து)  தலைவன் மாலைப்பொழுதின் கண்ணும் வரும் இரவுக்குறியை நயந்தான்; அதனைக் குறிப்பினால் அறிந்தேன்.
     (வி-ரை)  மன்றம் - குறவர் ஊர்களிலுள்ள பொது இடம்.
     பிடியை நயந்த களிறு குன்றம் நண்ணுமென்றது நின்னை நயந்ததலைவன் ஊராரலருக்கு அஞ்சி மனையகத்தே இரவில் வருவானென்றகுறிப்பை உணர்த்தியது.
     நல்லகம் என்றலின் அவன் நயந்தது நன்மையையே பயக்குமென்றதன் உடம்பாட்டை உணர்த்தினாள்; இதனால் தலைவியைத் தோழிஇரவுக்குறி நயப்பித்தாளாயிற்று.
    (மேற்கோளாட்சி) மு. தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது (தொல்.களவு. 23, ந.) 
    ஒப்புமைப் பகுதி  3.    மன்றம் போழ்தல்:  குறுந். 301:5. 
    4.  சுனைப்பூங்குவளை: குறுந். 59:2-3, ஒப்பு, 321:2. 
    5.  தலைவன் தலைவியொடு கிள்ளையோப்புதல்: "பைந்தாட்செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம், செந்தார்க் கிள்ளை நம்மொடுகடிந்தோன்", "களிறணந் தெய்தாக் கன்முகை யிதணத்துச், சிறுதினைப்படுகிளி யெம்மோ டோப்பி" (அகநா. 242:5-6, 308:9-10.) 
    4-5.  சுனைப்பூவினால் தொடலை கட்டுதலும் கிளியோப்புதலும்:குறுந். 142: 1-2. 8. தலைவன் தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமை: குறுந். 298:2; கலி. 37:1-5; திருச்சிற். 82, 83.  
(346)