(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.) (பி-ம்.) 3. ‘பகலையாகிய’; 5. ‘நன்மலர்’; 7. ‘னக்கதன்’.
(ப-ரை.) வெள் குருகு - வெள்ளை நாரைகள், நரலும் -ஒலிக்கின்ற, தண் கமழ் கானல் - தண்ணியதாகக் கமழ்கின்றகடற்கரையிலேயுள்ள, பூ மலி பொதும்பர் நாள் மலர் மயக்கி - மலர் நிறைந்த சோலையிலுள்ள செவ்வி மலர்களைக் கலக்கச்செய்து, விலங்கு திரை - குறுக்கிடும் அலைகள், உடைதரும்துறைவனொடு - உடைந்து செல்கின்ற துறையையுடைய தலைவனோடு, இலங்கு எயிறு தான்ற நக்கதன் பயன் - விளங்குகின்ற பற்கள் வெளிப்டச் சிரித்து மகிழ்ந்ததனால் உண்டான பயன், தொல் கவின் தொலைந்து - பழையஅழகு அழிய, தோள் நலம் சாஅய் - தோளினது நலம்மெலிய, அல்லல் நெஞ்சமோடு - துன்பத்தையுடைய நெஞ்சோடு, அல்கலும் - இரவுதோறும், துஞ்சாது - தூங்காமல்,பசலை ஆகி - பசலை உண்டாக, விளிவது கொல் - நாம் அழிவதுவோ?
(முடிபு) நக்கதன் பயன் விளிவதுகொல்?
(கருத்து) தலைவனோடு நட்புச் செய்ததற்கு நாம் அழிதலோ பயன்?
(வி-ரை.) தொலைந்து, சாஅய், ஆகி என்பன, செயவென் எச்சங்கள் செய்தெனெச்சமாகத் திரிந்து நின்றன.
புன்னை முதலிய மரம் நீரளவும் தாழ்ந்திருத்தலின் திரை மலரை மயக்கியது. நக்கது: இடக்கரடக்கல்.
“தலைவனோடு நக்கதன்பயன் இன்பந்தருவதாயிருத்தலை யன்றிநாம் அழிதல்கொல்?” என்றது அவனது பெருமைக்கு இழுக்குப் போலத் தோற்றுதலின் இயற்பழித்ததாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. தொல்கவின் தொலைதல்: நற். 56:8, 283:4, 350:5; கலி. 2:28, 16:5, 26:10; அகநா. 147 12, 177:1, 235: 18, 270:10. 2. தோள் நலம் சாய்தல்: முத். 54, 55, 69, 3. மு.நற். 14:1.
2. தலைவி துயிலாமை: குறுந். 6:4, ஒப்பு.
1-3. தோள்மெலிதலும் பசலை உண்டாதலும்: ”பெருந்தோணெ கிழ வவ்வரி வாடச்ற சிறுமெல் லாகம் பெரும்பசப் பூர” (நற். 358:1-2.)
6-7. தலைவனோடு நகுதல்: குறுந். 401:5; அகநா. 156:12.
(381)