|
|
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
|
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
|
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
|
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
|
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
|
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
|
கையற வந்த மையல் மாலை |
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
|
வந்தன்று, பெருவிறல் தேரே; |
|
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. |
உரை |
|
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
|
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; |
|
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், |
|
பாவை அன்ன நிற் புறங்காக்கும் |
|
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; |
5 |
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
|
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, |
|
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!- |
|
கீழும் மேலும் காப்போர் நீத்த |
|
வறுந் தலைப் பெருங் களிறு போல, |
10 |
தமியன் வந்தோன், பனியலை நீயே! |
உரை |
|
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
|
|
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, |
|
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, |
|
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, |
|
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, |
5 |
உமணர் போகலும் இன்னாதாகும்- |
|
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு |
|
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் |
|
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; |
|
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த |
10 |
வறு நீர் நெய்தல் போல, |
|
வாழாள் ஆதல் சூழாதோயே. |
உரை |
|
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
|
|
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் |
|
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு |
|
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; |
|
''இனியே, தாங்கு நின் அவலம்'' என்றிர்; அது மற்று |
5 |
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
|
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண் |
|
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் |
|
அணி இயற் குறுமகள் ஆடிய |
|
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. |
உரை |
|
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
|
காமம் கைம்மிக, கையறு துயரம் |
|
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
|
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
|
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
|
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
|
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
|
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. |
உரை |
|
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
|
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி, |
|
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு, |
|
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும் |
|
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை, |
5 |
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, |
|
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர் |
|
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில- |
|
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு |
|
காமர் பொருட் பிணி போகிய |
10 |
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.
|
|
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, |
|
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய, |
|
பல் பூங் கானலும் அல்கின்றன்றே; |
|
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, |
5 |
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
|
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு |
|
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட |
|
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், |
|
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு |
10 |
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? |
உரை |
|
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்
|
|
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
|
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
|
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
|
மெல் விரல் மோசை போல, காந்தள் |
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
''நன்றி விளைவும் தீதொடு வரும்'' என, |
|
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
|
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
|
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. |
உரை |
|
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
|
தம் அலது இல்லா நம் நயந்து அருளி |
|
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், |
|
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் |
|
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் |
5 |
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
|
எவ் வினை செய்வர்கொல் தாமே?-வெவ் வினைக் |
|
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய |
|
கானப் புறவின் சேவல் வாய் நூல் |
|
சிலம்பி அம் சினை வெரூஉம், |
10 |
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
|
|
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
|
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
|
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
|
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
|
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
|
வலை மான் மழைக் கண், குறுமகள் |
|
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! |
உரை |
|
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|
|