1 |
|
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன் |
5 |
யாணர் ஊரன் வாழ்க! |
|
பாணனும் வாழ்க!' என வேட்டேமே. |
|
புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. |
|
|
|
2 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | விளைக வயலே! வருக இரவலர்!' | | என வேட்டோளே, யாயே: யாமே, | | 'பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் | 5 | தண் துறை ஊரன் கேண்மை | | வழிவழிச் சிறக்க!' என வேட்டேமே. | |
|
|
|
3 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!' | | என வேட்டோளே, யாயே: யாமே, | | 'வித்திய உழவர் நெல்லொடு பெயரும், | 5 | பூக் கஞல் ஊரன் தன் மனை | | வாழ்க்கை பொலிக!' என வேட்டேமே. | |
|
|
|
4 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!' | | என வேட்டோளே யாயே: யாமே, | | 'பூத்த கரும்பின், காய்த்த நெல்லின், | 5 | கழனி ஊரன் மார்பு | | பழனம் ஆகற்க!' என வேட்டேமே. | |
|
|
|
5 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!' | | என வேட்டோளே, யாயே: யாமே, | | 'முதலைப் போத்து முழு மீன் ஆரும் | 5 | தண் துறை ஊரன் தேர் எம் | | முன்கடை நிற்க' என வேட்டேமே. | |
|
|
|
6 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!' | | என வேட்டோளே யாயே: யாமே, | | 'மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத் | 5 | தண் துறை ஊரன் வரைக! | | எந்தையும் கொடுக்க! என வேட்டேமே. | |
| களவினில் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. 6 | | |
|
|
7 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!' | | என வேட்டோளே யாயே: யாமே, | | 'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் | 5 | தண் துறை ஊரன் தன் ஊர்க் | | கொண்டனன் செல்க!' என வேட்டேமே. | |
|
|
|
8 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | அரசு முறை செய்க! களவு இல்லாகுக!' | | என வேட்டோளே, யாயே: யாமே, | | 'அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும் | 5 | பூக் கஞல் ஊரன் சூள் இவண் | | வாய்ப்பதாக!' என வேட்டேமே. | |
|
|
|
9 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!' | | என வேட்டோளே, யாயே: யாமே, | | 'கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் | 5 | தண் துறை ஊரன் கேண்மை | | அம்பல் ஆகற்க!' என வேட்டேமே. | |
|
|
|
10 | | 'வாழி ஆதன், வாழி அவினி! | | மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! | | என வேட்டோளே, யாயே: யாமே, | | 'பூத்த மாஅத்து, புலால்அம் சிறு மீன், | 5 | தண் துறை ஊரன் தன்னொடு | | கொண்டனன் செல்க!' என வேட்டேமே. | |
|
|
|