101 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண் | | ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு | | நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் | | பூப் போல் உண்கண் மரீஇய | 5 | நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. | |
| அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1 | | |
|
|
102 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர் | | நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது, | | துன்புறு துயரம் நீங்க, | | இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே. | |
|
|
|
103 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு | | ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் | | இவட்கு அமைந்தனனால் தானே; | | தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே. | |
| அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3 | | |
|
|
104 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் | | பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய் | | நள்ளென வந்த இயல் தேர்ச் | | செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே. | |
| புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4 | | |
|
|
105 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல் | | திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் | | தண்ணம் துறைவன் வந்தென, | | பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே. | |
| அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5 | | |
|
|
106 | | அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத் | | துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் | | தண் கடல் வளையினும் இலங்கும் இவள் | | அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. | |
| அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6 | | |
|
|
107 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி | | சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து, | | தண் கடல் படு திரை கேட்டொறும், | | துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. | |
| தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7 | | |
|
|
108 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய | | முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் | | எம் தோள் துறந்தனன்ஆயின், | | எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே? | |
| அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8 | | |
|
|
109 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல் | | நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் | | எம் தோள் துறந்த காலை, எவன்கொல் | | பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே? | |
| அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9 | | |
|
|
110 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை | | பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை | | 'என்னை' என்றும், யாமே; இவ் ஊர் | | பிறிது ஒன்றாகக் கூறும்; | 5 | ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே? | |
| நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 | | |
|
|