161 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | கருங் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் | | பயந்து நுதல் அழியச் சாஅய், | | நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே! | |
| ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது. 1 | | |
|
|
162 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, | | பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் | | துறைவன் சொல்லோ பிற ஆயினவே! | |
|
|
|
163 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | இருங் கழித் துவலை ஒலியின் துஞ்சும் | | துறைவன் துறந்தென, துறந்து என் | | இறை ஏர் முன்கை நீங்கிய, வளையே. | |
|
|
|
164 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | இருங் கழி மருங்கின் அயிரை ஆரும் | | தண்ணம் துறைவன் தகுதி | | நம்மோடு அமையாது, அலர் பயந்தன்றே! | |
| தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
165 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | அறு கழிச் சிறு மீன் ஆர மாந்தும் | | துறைவன் சொல்லிய சொல் என் | | இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே! | |
|
|
|
166 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் | | மெல்லம் புலம்பன் தேறி, | | நல்ல ஆயின, நல்லோள் கண்ணே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி அவனை இயற்பழித்துக் கூறியது. 6 | | |
|
|
167 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | இருங் கழி இனக் கெடிறு ஆரும் துறைவன் | | நல்குவன் போலக் கூறி, | | நல்கான் ஆயினும், தொல் கேளன்னே. | |
| பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வாயிலாய் வந்தார்க்கு அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் சொல்லியது. 7 | | |
|
|
168 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | துறை படி அம்பி அகமணை ஈனும் | | தண்ணம் துறைவன் நல்கின், | | ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே. | |
| நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசி அட நிற்புழி, 'இதற்குக் காரணம் என்?' என்று செவிலி வினவ, தோழி அறத்தொடு நின்றது. 8 | | |
|
|
169 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ் | | புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன் | | நெஞ்சத்து உண்மை அறிந்தும், | 5 | என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே? | |
| காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9 | | |
|
|
170 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | இருங் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் | | 'நல்லன்' என்றிஆயின்; | | பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ? | |
| தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சி இல்லை; நம்மேல் அன்புடையன்' என்று தெளிக்கும் தோழிக்குச் சொல்லியது. 10 | | |
|
|