211 | | நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன | | வயலைஅம் சிலம்பின் தலையது | | செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்! | | தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1 | | |
|
|
212 | | சாத்த மரத்த பூழில் எழு புகை | | கூட்டு விரை கமழும் நாடன் | | அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்! | | வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2 | | |
|
|
213 | | நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த | | ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர், | | உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல் | | மீமிசை நல் நாட்டவர் வரின், | 5 | யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்! | | வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3 | | |
|
|
214 | | சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம் | | இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில் | | பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன், | | பேர் அமர் மழைக் கண் கலிழ, தன் | 5 | சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்! | | தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4 | | |
|
|
215 | | கட்டளை அன்ன மணி நிறத் தும்பி, | | இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர், | | தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் | | தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும் | 5 | புதல் மலர் மாலையும் பிரிவோர் | | அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்! | | இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5 | | |
|
|
216 | | குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை, | | நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற | | நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின் | | பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு, | 5 | கொய்தரு தளிரின் வாடி, நின் | | மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்! | | வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6 | | |
|
|
217 | | பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ | | மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும் | | கானக நாடன் வரவும், இவள் | | மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்! | | வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7 | | |
|
|
218 | | நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்; | | மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்; | | களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி | | எழுதரு மழையின் குழுமும் | 5 | பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்! | | தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8 | | |
|
|
219 | | கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ | | இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம் | | நல் மலை நாடன் பிரிந்தென, | | ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்! | | வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9 | | |
|
|
220 | | அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி | | ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன் | | பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு | | முயங்காது கழிந்த நாள், இவள் | 5 | மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்! | | நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 | | |
|
|