31 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர் | | முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை | | உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே? | |
| முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது. | | |
|
|
32 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள் | | அழுப என்ப, அவன் பெண்டிர் | | தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. | |
| வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
33 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை, | | பெண்டிரொடு ஆடும் என்ப தன் | | தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே. | |
|
|
|
34 | | அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் | | பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல் | | தாது ஏர் வண்ணம் கொண்டன | | ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே. | |
|
|
|
393 | | துறந்ததற் கொண்டு துயர் அடச் சாஅய், | | அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி! | | எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக | | வந்தனளோ நின் மட மகள் | 5 | வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே? | |
| உடன்போய்த் தலைமகள் மீண்டு வந்துழி, அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. 3 | | |
|
|
395 | | முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச் | | சுடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும் | | இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம்; மென்மெல | | ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து | 5 | கறங்கு இசை அருவி வீழும், | | பிறங்கு இருஞ் சோலை, நம் மலை கெழு நாட்டே. | |
| உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. 5 | | |
|
|
397 | | 'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை | | குருளைப் பன்றி கொள்ளாது கழியும் | | சுரம் நனி வாராநின்றனள்' என்பது | | முன்னுற விரைந்த நீர் மின் | 5 | இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே. | |
| உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7 | | |
|
|
399 | | 'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும், | | எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச் | | சொல்லின் எவனோ மற்றே வென் வேல், | | மை அற விளங்கிய கழல்அடி, | 5 | பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே? | |
| உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9 | | |
|
|
401 | | மறி இடைப்படுத்த மான் பிணை போல, | | புதல்வன் நடுவணன் ஆக, நன்றும் | | இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி | | நீல் நிற வியலகம் கவைஇய | 5 | ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே. | | கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது. | | |
|
|