351 | | அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய், | | அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும் | | காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி | | பல் இதழ் உண்கண் மடந்தை! நின் | 5 | நல் எழில் அல்குல் வாடிய நிலையே. | |
| பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1 |
|
|
|
352 | | விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர் | | எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப் | | பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும் | | வெஞ் சுரம் 'அரிய' என்னார், | 5 | வந்தனர் தோழி! நம் காதலோரே! | |
|
|
|
353 | | எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச் | | சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் | | நீ இனிது முயங்க, வந்தனர் | | மா இருஞ் சோலை மலை இறந்தோரே. | |
|
|
|
354 | | ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை | | மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் | | அரிய சுரன் வந்தனரே | | தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே. | |
|
|
|
355 | | திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி, | | 'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச் | | சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச் | | சிறு கண் யானை திரிதரும் | 5 | நெறி விலங்கு அதர கானத்தானே. | |
| நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5 |
|
|
|
356 | | உள்ளுதற்கு இனியமன்ற செல்வர் | | யானை பிணித்த பொன் புனை கயிற்றின், | | ஒள் எரி மேய்ந்த சுரத்திடை | | உள்ளம் வாங்க, தந்த நின் குணனே. | |
| வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6 |
|
|
|
123 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப, | |
| தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3 | | |
|
|
125 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | தெண் திரை பாவை வௌவ, | |
| உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5 | | |
|
|
127 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | தும்பை மாலை இள முலை | |
| நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7 | | |
|
|
129 | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | |
| (இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9 | | |
|
|
383 | | கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற | | நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி, | | வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற | | மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே | 5 | பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் | | அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே. | |
| உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3 | | |
|
|
385 | | 'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி, | | கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய, | | வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக் | | கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்! | 5 | நல் தோள் நயந்து பாராட்டி, | | எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே. | |
| வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5 | | |
|
|
388 | | நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் | | கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ, | | சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப் | | பொன் ஏர் மேனி மடந்தையொடு | 5 | வென் வேல் விடலை முன்னிய சுரனே. | |
| தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8 | | |
|
|