411 | | ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக் | | கார் தொடங்கின்றால், காமர் புறவே; | | வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் | | தாழ் இருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே. | |
| பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப் பருவத்திற்கு முன்னே வந்து, தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம் வந்ததாக, தான் பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்றக் கூறுவான் தலைவிக்கு த்தது. 1 | | |
|
|
412 | | காயா, கொன்றை, நெய்தல், முல்லை, | | போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப் | | பூ அணி கொண்டன்றால் புறவே | | பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே. | |
|
|
|
413 | | நின் நுதல் நாறும் நறுந் தண் புறவில் | | நின்னே போல மஞ்ஞை ஆல, | | கார் தொடங்கின்றால் பொழுதே | | பேர் இயல் அரிவை! நாம் நயத்தகவே. | |
|
|
|
414 | | புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள, | | கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி | | மெல் இயல் அரிவை! கண்டிகும் | | மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே. | |
|
|
|
415 | | இதுவே, மடந்தை! நாம் மேவிய பொழுதே; | | உதுவே, மடந்தை! நாம் உள்ளிய புறவே; | | இனிது உடன் கழிக்கின், இளமை | | இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே! | |
|
|
|
416 | | போது ஆர் நறுந் துகள் கவினிப் புறவில், | | தாது ஆர்ந்து, | | களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின், | | மடப் பிடி தழீஇய, மாவே; | 5 | சுடர்த் தொடி மடவரல் புணர்ந்தனம், யாமே! | |
| பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி, அதற்கு இனியனாய்த் தன்னுள்ளே சொல்லுவான் போன்று, தலைவி அறியுமாற்றால் கூறியது. 6 | | |
|
|
417 | | கார் கலந்தன்றால் புறவே; பல உடன் | | ஏர் பரந்தனவால் புனமே; ஏர் கலந்து | | தாது ஆர் பிரசம் மொய்ப்ப, | | போது ஆர் கூந்தல் முயங்கினள், எம்மே. | |
|
|
|
418 | | வானம்பாடி வறம் களைந்து, ஆனாது | | அழி துளி தலைஇய புறவில், காண்வர | | வானர மகளோ நீயே | | மாண் முலை அடைய முயங்கியோயே? | |
| குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவு வெளிப்பாடு கண்ட தலைமகன் இல்லத்துப் புகுந்துழி, தலைமகட்குச் சொல்லியது. 8 | | |
|
|
419 | | உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப் | | பிரிந்துறல் அறியா, விருந்து கவவி, | | நம் போல் நயவரப் புணர்ந்தன | | கண்டிகும் மடவரல்! புறவின் மாவே. | |
| இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற பருவம் வந்துழி, தலைமகளொடு புறவில் சென்ற தலைமகன் அவ்விடத்து மாக்களை அவட்குக் காட்டிச் சொல்லியது. 9 | | |
|
|
420 | | பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத் | | தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு | | நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக் | | காணிய வருதும், யாமே | 5 | வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே. | |
| குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10 | | |
|
|