471 | | எல் வளை நெகிழ, மேனி வாட, | | பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க, | | துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்; | | அது மற்று உணர்ந்தனை போலாய் | 5 | இன்னும் வருதி; என் அவர் தகவே? | |
| பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1 | | |
|
|
192 | | கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க, | | பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும் | | துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன, | | வீங்கின மாதோ தோழி! என் வளையே! | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2 | | |
|
|
196 | | கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல், | | ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின் | | தெண் கழிச் சேயிறாப் படூஉம் | | தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ. | |
| குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6 | | |
|
|
199 | | கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும் | | வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது, | | காண்கம் வம்மோ தோழி! | | செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே! | |
| தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9 | | |
|
|
202 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் | | பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் | | குடுமித் தலைய மன்ற | | நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே. | |
| தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2 | | |
|
|