51 | | நீர் உறை கோழி நீலச் சேவல் | | கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! | | புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் | | மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. | |
| வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1 | | |
|
|
54 | | திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை | | வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் | | தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, | | ஊரின் ஊரனை நீ தர, வந்த | 5 | பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு | | அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. | |
| வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 | | |
|
|
56 | | பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, | | வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் | | நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, | | எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? | | புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 | | |
|
|
244 | | அம்ம வாழி, தோழி! பல் மலர் | | நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை | | குன்றம் பாடான் ஆயின், | | என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே? | |
| வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4 | | |
|
|
249 | | பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு, | | 'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன் | | வாழிய இலங்கும் அருவிச் | | சூர் மலை நாடனை அறியாதோனே! | |
| வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9 | | |
|
|