12

( 2 ) வேழப்பத்து


12. கரைசேர் வேழங் கரும்பிற் பூக்கும்
   துறைகே ழூரன் 1கொடுமை நன்றும்
   ஆற்றுக தில்ல யாமே
   தோற்க தில்லவென் றடமென் றோளே.

 எ-து உழையர் 2நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமை
யும் நினைந்து வாயில்நேரக் கருதிய தலைமகள் பரத்தையர்க்குப்
பின்பும் அவன் சிறப்புச் செய்தானென்பது கேட்டுப் பொறாளாய்க்
கருத்தழிந்து தன்னுள்ளே சொல்லியது.

(ப-ரை) கரைமருங்கு நிற்கும் வேழம் வயலகத்து விளைக்கும்
தீங்கரும்புபோலப் பொலியுமூரனென்றது பொதுமகளிர்க்குக் குல
மகளிரைப் போலச் சிறப்புச் செய்கிற்பான் எ-று.

குறிப்பு. கரைசேர் வேழம் : ஐங். 13 : 2, 20 : 3-4. கரும்பின்-
கரும்பைப் போல. வேழம் கரும்பைப் போலப்பூத்தல்: ?வேழம்,
கரும்பி னலமருங் கழனி? (ஐங், 18 : 1-2). நன்றும் ஆற்றுக தில்ல-
பெரிதும் பொறுப்பேமாக; உம்: அசைநிலை; தில்: விழைவுப்
பொருளில் தன்மைக்கண் வந்தது; தொல். இடை. 12; குறுந். 57.
தோற்க-மெலிக; தொடிகள் முதலியவற்றை இழக்க எனினுமாம்.
தில்ல: அசை. யாம், என் என்பன பன்மை ஒருமை மயக்கம்.

 உழையர் - பக்கத்துள்ளோர். வாயில்-துாது.

(மேற்.) அடி, 1-2. கருப்பொருள்தானே உவவமாய் நின்று
உள்ளுறைப் பொருள் தந்தது (தொல். அகத். 46, ந.). மு. ‘என்பது
பயவுவமப் போலி ; இதனுள் தலைமகன் கொடுமை கூறியதல்லது
அக்கொடுமைக்கு ஏதுவாகிய தொன்று விளங்கக் கூறியதிலளா
யினும் இழிந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்குமெனவே அவற்
றிற்கும் இழிவு உயர்வா மென்பதொன்றில்லை, எல்லாரும் இன்பங்
கோடற்குரியர் தலைமகற்கு என்றமையின் யாமும் பரத்தையரும்
அவற்கு ஒத்தனம் என்றமையின் அவை கூறினாள் என்பது?
(தொல். உவம. 25 , பேர்.). இம்மேற்கோளில் ஐங். 11-ம் பாட்டின்
பின் இரண்டடிகள் 12-ம் பாட்டின் பின் இரண்டடிகளாகக்
கொள்ளப்பட்டுள்ளன.

(பி-ம்.) 1‘கொடுமை நாணி? 2‘நெருக்கிக்? ( 2 )