13

( 2 ) வேழப்பத்து


13. 1பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
  அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
  தண்டுறை யூரன் பெண்டிர்
  2துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே.

  எ-து வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், ‘அவன் பெண்டிர்
நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வருந்
திறம் யாது?? எனச் சொல்லி வாயில் மறுத்தது.

(ப-ரை.) பரியுடைநன்மான் தலைக்கணிந்த வெண்கவரிபோல
வேழம் வெண்பூவைக் கொள்வாரைக்குறித்துக் கொடுக்குமூர
னென்றது நன்றுபோலக் காட்டித் தம் நலத்தினை விற்பார் வாழும்
ஊரன் எ-று.

குறிப்பு. பரி-நடை, மான்-குதிரை, பொங்குதல்-மேன்மேற்
கிளர்தல், உளை-குதிரையின் தலையில் அணியப்படும் சாமரை,
உளையன்ன வேழவெண்பூ: ?வேழ வெண்பூ வெள்ளுளை?
(ஐங். 19: 3) பகரும்-கொள்வாரைக் குறித்துக் கொடுக்கும். தண்டுறை
யூரன் : ஐங். 21 : 3, 83 : 4, 88 : 2. பெண்டிர் என்றது பரத்தைய
ரை. துஞ்சூர் யாமத்தும் : ஊர் துஞ்சு யாமத்தும் என மாற்றுக; ஊர்
துஞ்சு யாமம்: ஊரார் துயிலும் நள்ளிரவு; நற். 262 : 3; குறுந்.
302 : 7; அகநா. 360 : 12; கலித். 65 : 3.

(மேற்.) மு. இஃது ஊடல் நிமித்தம் என்பது (தொல்: அகத். 14, .)

(பி-ம்.) 1‘புரியுடை?, ‘புரிவுடை? 2‘துஞ்சும் யாமத்துந்?          ( 3 )